“சர்கார் பேனரை கிழித்ததால் அதிமுக ஆட்சியை இழந்தது!'' – அமைச்சர் ஆனந்த் கடும் விமர்சனம்

Spread the love

சட்டமன்றத்தில் இன்று நீர்வளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்திருந்தது. இதில் பதிலளித்து பேசிய அமைச்சர் ஆனந்த் சர்கார் பட சமயத்தில் நடந்த விவகாரத்தை குறிப்பிட்டு அதிமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.

Anand
Anand

அவர் பேசியதாவது, “நான் புதுச்சேரியில் எம்.எல்.ஏவாக இருந்தேன். சாதாரண ஆள். கவுன்சிலர் அளவுக்குதான் அங்கே ஓட்டு. இங்கே நான் அமைச்சராக இருக்கிறேன் என்றால் தலைவர்தான் காரணம்.

துணை சபாநாயகரை தேர்தலில் நிறுத்திய போது என்னிடம் 75000 ரூபாய்தான் இருக்கிறது என்றார். ‘அது போதும் நீ நில்லு நான் பார்த்துக் கொள்கிறேன்’ என தலைவர் சொன்னார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் யார் யாரெல்லாமோ சீட் கேட்டார்கள். அங்கே ஒன்றியத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கமால் யார் யாருக்கோ ஏன் கொடுக்க நினைக்கிறாய் என தலைவர் கேட்டார். ‘பணம் இல்லை’ என்கிறார்கள் என்றேன். ‘கட்டுத்தொகைக்கு பணம் இருந்தால் போதும். வரச் சொல்’ என்றார்

சென்ட்ரிங் வேலைக்கு 1500 ரூபாய் சம்பளத்துக்கு செல்லும் தொழிலாளியை எம்.எல்.ஏ ஆக்கியிருக்கிறோம். சாதி, மதம் எல்லாவற்றையும் கடந்தது தலைவருக்காக விழுந்த வாக்குகள் அவை.

Anand
Anand

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அல்லேரி கிராமத்தில் ஒரு கர்ப்பிணி பெண்ணை கட்டிலில் தூக்கி வந்தார்கள். அந்த வீடியோவை அனுப்பி, ‘கலெக்டரிடம் பேசிவிட்டேன். உடனடியாக வேண்டியதை செய்து கொடுங்கள்’ என்றார். இதோ இப்போது அங்கே 21 கோடியில் ரோடு போடப் போகிறோம்.

ஒரு மனிதனை எப்படியெல்லாம் புண்படுத்த முடியுமோ புண்படுத்தினார்கள். சர்கார் பேனரை கிழிக்காமல் இருந்திருந்தால் அவர்கள் (அதிமுகவை நோக்கி) இந்த இடத்தில் இருந்திருப்பார்கள். பேனரை கிழித்ததால் அவர்கள் (அதிமுகவை நோக்கி) அங்கே இருக்கிறார்கள்.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *