சர்ச்சை வீடியோ: “அது மனிதர்களால் ஏற்பட்ட பிழை கிடையாது AI தொழில்நுட்பத்தால்” – அமைச்சர் ராஜ் மோகன்! | minister raj mohan replies about singappenne scheme video controversy

Spread the love

கோவையில் தமிழக அரசின் சார்பில் பிரமாண்ட அரசு பொருட்காட்சி தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பொருட்காட்சியின் தொடக்கவிழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் கலந்துகொண்டார்.

அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இன்று முறைபடி பொருட்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவின் ஒரு பகுதியாக, மக்கள் நலனை முன்னிறுத்தி பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, ஆதிதிராவிட மற்றும் இஸ்லாமிய சமூகங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் 4 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள், அடையாள அட்டைகள், ஈ-பட்டாக்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நல்வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த தமிழக முதலமைச்சருக்கு இந்த நேரத்தில் மனமார்ந்த நன்றிகள்

சிங்கப்பெண் திட்டம்

சிங்கப்பெண் திட்டம்

கடந்த வாரம் “சிங்கப்பெண்’ திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட காணொலியில் ஆங்காங்கே தமிழ் எழுத்துப்பிழைகள் இருந்தன. இது அதிகாரிகளின் கவனக்குறைவோ அல்லது மனிதர்களால் ஏற்பட்ட பிழையோ கிடையாது. இது முற்றிலும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் ஏற்பட்ட பிழை.

எனினும், இனிவரும் காலங்களில் காணொலிகள், ஆடியோக்கள் அல்லது வரைபடங்கள் என எந்தவொரு AI தொழில்நுட்பம் சார்ந்த அரசுப் பதிவுகள் வெளியாவதாக இருந்தாலும், அவை கட்டாயமாக தமிழ் வளர்ச்சித் துறையின் மறுஆய்வு மற்றும் ஆலோசனைக்குப் பிறகே வெளியிடப்பட வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *