சவுதி ரியாத் ஏர்போர்ட் மீது ஏவுகணை தாக்குதல்.. பலர் காயம்! விமானங்கள் திருப்பி விடப்பட்டன.. ஒரே பதற்றம் | Missile attack on Saudi Arabia Riyadh airport; many injured, flights diverted, and panic ensues

Spread the love

International

oi-Mani Singh S

ரியாத்: சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது. கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையம் மீது ஏவுகணை தாக்கியதாகவும், இதில் பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து, பாதுகாப்பு கருதி விமான நிலையத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் இந்த விமான நிலையத்துக்கு வரும் விமானங்களும் திருப்பி விடப்பட்டுள்ளன. இதற்கு முன்பு நடைபெற்ற தாக்குதல்களுக்கு ஹவுதி கிளர்ச்சிக்குழு பொறுப்பேற்று இருந்தது. ஆனால் இந்த தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சிக்குழு இதுவரை பொறுப்பேற்கவில்லை.

Missile attack on Saudi Arabia Riyadh airport many injured flights diverted and panic ensues

ஹவுதி கிளர்ச்சிக்குழு

ஏமன் அரசுப் படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் ஆண்டு கணக்கில் மோதல் நீடித்து வருகிறது. இதில், ஏமன் அரசுப் படையினருக்கு சவுதி அரேபியா ஆதரவு அளித்து வருகிறது. இதனால் ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சவுதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தின. சவுதியில் உள்ள அப்ஹா விமான நிலையம் மற்றும் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சிக்குழு பொறுப்பேற்றுக்கொண்டது.

விமான நிலையம் மீது மீண்டும் தாக்குதல்

ஏமனில் சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் தங்களது ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதன் தொடர்ச்சியாக விமான நிலையங்கள் மீதான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் அப்ஹா விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பேர் பலியாகி இருந்தனர். 28 பேர் காயம் அடைந்திருந்தனர். இந்த ஏவுகணை தாக்குதல் காரணமாக விமான சேவைகளும் பாதிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் மீண்டும் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த தாக்குதலில் சிக்கி பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து பாதுகாப்பு கருதி விமான நிலையத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், கிங் காலித் சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் விமானங்கள் மாற்றி விடப்பட்டதாகவும் அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய கிழக்கில் பதற்றம்

மேலும் இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த இரு நாட்களுக்கு முன்பு தான் இதே விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளி வந்த தகவல் சர்வதேச அளவில் விமான பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்களால் விமானப் போக்குவரத்தும் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மோதல்கள் நீடித்து வருவதால் மத்திய கிழக்கில் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இதற்கு முன்பு நடைபெற்ற தாக்குதல்களுக்கு ஹவுதி கிளர்ச்சிக்குழு பொறுப்பேற்று இருந்தது. ஆனால் இந்த தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சிக்குழு இதுவரை பொறுப்பேற்கவில்லை. எனவே, இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த தாக்குதலையடுத்து, ரியாத்துக்குச் செல்ல வேண்டிய விமானங்கள் வேறு இடங்களுக்குத் திருப்பிவிடப்பட்டதாக விமானப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் Flightradar24 தளம் தெரிவித்துள்ளது. குவைத் ஏர்வேஸ் நிறுவனமும் விமான நிலையம் மூடப்பட்டதைத் தொடர்ந்து தனது விமானச் சேவைகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *