தமிழக அமைச்சரவையில் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ.ரமேஷுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ரமேஷ் பிராமணர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பலரும் இதை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்திருக்கிறார்.
இந்நிலையில், `பிராமணர் என்கிற காரணத்திற்காக அறநிலையத்துறை அமைச்சர் பதவியா?” என்று செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ரமேஷிடம் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், ” சாதிக்கு எதிராக போராடிய பெரியாரை கொள்கை தலைவராக ஏற்றவன் நான். சாதி பார்த்து யாருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி எதுவும் வழங்கப்படவில்லை.
மதச்சார்பின்மை தான் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கொள்கை. எங்களுக்கு மதமோ, சாதியோ, இனமோ, பணமோ, மொழியோ, பாலினமோ எந்தவித பாகுபாடும் கிடையாது என்பதை உறுதியாக ஏற்றுக்கொண்டு தான் தவெகவில் சேர்ந்திருக்கிறோம்.