சிங்கப்பூரில் இந்தியர்களுக்கு எதிரான இனவாத தாக்குதல்கள்; Air India முதலீடு விவகாரத்தில் நடப்பதென்ன? |Air India Losses to Racist Attacks: How Singapore Row Escalated

Spread the love

இது குறித்துக் கேள்வி எழுப்பித்தான் சிங்கப்பூரில் பிரச்னை வெடித்துள்ளது.

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி, “சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் இருக்கும் தெமாசெக்கின் முதலீடுகள் ஏர் இந்தியாவில் பயன்படுத்தப்படுமா? ஏற்கெனவே ஏர் இந்தியா நிறுவனம் இழப்பில் உள்ளதே” என்று கேள்வி எழுப்பியது.

இதற்குச் சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி, “சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் உலகளாவிய போட்டி நிறுவனமாக மாறுவதற்குப் பிற நாடுகளில் முதலீடு செய்வது அவசியம்.

பிற நாடுகளில் செய்யப்படும் முதலீடுகள் உடனடியாக லாபம் தருவதாக இருக்காது.

மேலும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மாதிரியான சொந்த நாட்டு நிறுவனங்களிடம் வெளியில் போய் முதலீடு செய்யாதீர்கள் என்றும், உள்நாட்டிலேயே முதலீடு செய்யுங்கள் என்றும் கூற முடியாது” என்று பதிலளித்திருந்தார்.

தில்ஹன் பிள்ளை சந்த்ரசகரா

தில்ஹன் பிள்ளை சந்த்ரசகரா

தெமாசெக்கின் தலைமை அதிகாரி தில்ஹன் பிள்ளை சந்த்ரசகரா ஆவார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.

இவர் இந்தியர் என்பதால்தான், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்தின் முதலீடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று சமூக வலைதளங்களில் தில்ஹன் பிள்ளை சந்த்ரசகரா, தெமாசெக், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகியவற்றின் மீது சராமாரி தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன.

சமூக வலைதளத்தில் வரும் இந்தத் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *