சிந்து நதி நீரை தடுப்போரின் கைகளை வெட்டுவோம்.. இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான் அமைச்சர் | We will cut off those hands who lay claim to our share of Indus waters Treaty, says Pakistan Minister Muadik Malik

Spread the love

International

-Nantha Kumar R

இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது. இதனால் பாகிஸ்தான் தண்ணீர் இன்றி தவித்த வருகிறது. இந்நிலையில் தான் சிந்து நதி நீர் ஒப்பந்தப்படி தண்ணீர் தர மறுக்கும் நபர்களின் கைகளை வெட்டுவோம் என்று பாகிஸ்தான் பருவநிலை மாற்ற துறை அமைச்சர் முசாதிக் மாலிக் வாய்ச்சவடால் விடுத்துள்ளார்.

Tense Indus River water dispute between neighbor nations

கடந்த 2025ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நுழைந்து 4 பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். மொத்தம் 26 சுற்றுலா பயணிகள் பலியாகினர்.

இதற்கு பலியானதாக பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்த ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இதனால் சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் போகவில்லை. இதனால் பாகிஸ்தான் மக்கள் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் பாகிஸ்தானின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார் மற்றும் பருவநிலை மாற்ற துறை அமைச்சர் முசாதிக் மாலிக் கூறுகையில், ”அண்டை நாட்டு பிரதமர் (நரேந்திர மோடி) சிந்து நதி நீரை கட்டுப்படுத்துகிறார். பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு நீர் கூட செல்ல அனுமதிக்க மாட்டேன் என்று அவர் கூறுகிறார். எங்களது தண்ணீர் பங்கீட்டை தடுக்கும் நபர்களின் கைகளை வெட்டுவோம்” என்றார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதன்மூலம் பாகிஸ்தான் அமைச்சர் முசாதிக் மாலிக் நம் நாட்டின் பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுபற்றி பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார் கூறுகையில், ”சிந்து நதி நீர் ஒப்பந்தம் இன்னும் சட்டப்பூர்வமாக அமலில் உள்ளது. இதனால் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யவோ, திருத்தவோ முடியாது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் விவகாரத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டிற்கு சர்வதேச ஆதரவு கிடைத்துள்ளது. ஆனால் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் முடிவுக்கு உலகளவில் ஆதரவு கிடைக்கவில்லை” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *