“சினிமாதான் என் முழுநேர கவனம்!” – ‘கனா காணும் காலங்கள்’ சங்கவி மோனிஷாவின் ரீ-என்ட்ரி ஸ்பெஷல் பேட்டி! |”Acting is My Full-Time Focus Now!” – KKK fame Monisha Ravishankar Shares About Her Re-Entry

Spread the love

இன்று வரை நான் வெளியே சென்றாலும் என்னை பலரும் சங்கவி என்றுதான் அழைக்கிறார்கள். இவ்வளவு பெரிய இடைவெளிக்குப் பிறகும் மக்கள் என்னை நினைவில் வைத்து இப்போது பேசுகிறார்கள்.

அதுவும் அவர்கள் ஆர்வத்தோடு, ‘அடுத்த ப்ராஜெக்ட் என்ன?’ என்று கேட்கும்போது மிகவும் எமோஷனலாக இருக்கிறது.” என்றவர், “நான் சினிமா பக்கமே வரவில்லை என்று பலரும் சமூக வலைத்தளங்களில் என்னை தேடிக்கொண்டிருந்தார்கள்.

ஆனால், நான் மருத்துவ மேல் படிப்புக்காகச் சென்றதால், என் ஒரிஜினல் பெயரைக் கூட மாற்றிக்கொண்டு முற்றிலும் அமைதியான ஒரு தனிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து வந்தேன். எம்.பி.பி.எஸ் படிப்பது சாதாரண விஷயம் அல்ல என்பதால், அந்தப் படிப்புக்கான முழு நேரத்தையும் உழைப்பையும் நான் கொடுத்தேன்.

 Monisha Ravishankar - Idhayam Murali

Monisha Ravishankar – Idhayam Murali

அப்போது என்னை நேரில் பார்ப்பவர்கள் ‘எப்போது நடிக்க வருவீர்கள்?’ என்றுதான் தொடர்ந்து கேட்பார்கள். ஆனால், சினிமாவுக்கு நான் மீண்டும் வந்துவிடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. நான் நினைத்ததுபோலவே வாய்ப்பும் வந்தமைந்தது.

இத்தனை வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் முதல் நாள் கேமரா முன்னால் நின்ற அந்தத் தருணம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு பேரனுபவம்!

நான் அழவில்லை என்றாலும், மனதிற்குள் பெரும் உணர்ச்சிப் பெருக்காக இருந்தது. நான் டாக்டராக இருந்தாலும் இப்போது நான் முழு நேரமாக நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்.

மருத்துவப் படிப்பு மற்றும் பணிக்கான நேரத்தை ஏற்கனவே நான் கொடுத்துவிட்டதால், இனி என் முழு நேரமும் சினிமாவுக்குத்தான்!” என்றார் உற்சாகத்துடன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *