“சினிமாவுக்கு நல்லது பண்ணியிருப்பேன்; சமூகத்துக்கு நல்லது பண்ணியிருப்பேனா!?” – இயக்குநர் சசி பேட்டி |director-sasi-interview-about-100-kodi-vaanavil-and-nuru-saami-impact

Spread the love

கதையை நாம் சரியாகச் சொல்லிவிட்டால், அது தானாகவே கைதட்டல்களை வாங்கிக்கொள்ளும்” என்றவர், அவருடைய கதாபாத்திரங்களை வடிவமைக்கும் விதம் குறித்துப் பகிர்ந்துகொண்டபோது, “கதையின் இயல்பை மீறாமல் கதாபாத்திரத்தின் செயல்களை ஒரு ஹீரோயிசமாக மாற்ற வாய்ப்பிருந்தால் அதைச் செய்ய இப்போது தொடங்கியிருக்கிறேன்.

வாழ்க்கையில் பல இடங்களில் நிஜமான ஹீரோயிசம் இருக்கிறது. உதாரணமாக, ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்டபோது காந்தி எழுந்து நின்றாரே, அது நிஜமான ஹீரோயிசம்.

அப்படி நிஜ வாழ்க்கையில் ஹீரோயிசத்துடன் வாழும் பல மனிதர்களின் கதைகளை நாமும் ஹீரோயிசத்துடன் திரையில் சொல்ல வேண்டும்” என்றார்.

தொடர்ந்து, ‘நூறு சாமி’ திரைப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பு குறித்துப் பேசியவர், “‘நூறு சாமி’ படத்தை, ‘பூ’ படம் போல இன்னும் 20 வருடங்களுக்குப் பேசப்படும் படமாக மாற்றி இருக்க முடியும். அதனால், சினிமாவுக்கு நல்லது செய்திருப்பேன்.

ஆனால், சமூகத்துக்கு நல்லது செய்திருப்பேனா எனத் தெரியவில்லை. இந்தப் படம் சாதாரண மனிதர்களுக்குப் போய் சேர வேண்டும் என்பதற்காகச் சில காம்ப்ரமைஸ்களை ஏற்றுக்கொண்டு திரைக்கதையை அமைத்தேன்.

சமீபத்தில் நிகழ்ந்த ‘நீயா நானா’ நிகழ்ச்சியில், பெற்றோருக்கு மறுமணம் செய்து வைக்க விரும்பும் 8-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், ‘நூறு சாமி படம் பார்த்த பிறகுதான் எங்கள் பெற்றோரிடம் பேசும் தைரியம் வந்தது’ என்று கூறியதைக் கேட்டபோது எனக்குப் பெரும் திருப்தி கிடைத்தது” என நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார்.

முழு பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *