இதனால் தென்னிந்திய மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஏஐ தலைத்தோங்கிய இந்தக் காலகட்டத்திலும் இன்னும் மும்மொழிக் கொள்கைக்கான சண்டைகள் நடந்து கொண்டே இருக்கின்றன.
ஆகையால் மத்திய கல்வி அமைச்சர் மற்றும் இந்த சிபிஎஸ்சி விடைத்தாள் குளறுபடியில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் நாட்டின் கல்வி எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அரசியலுக்கப்பாற்பட்டு, இது அரசியல் அமைப்பிற்கு எதிரானது என உணர்ந்து “உடனடியாக பதவி விலக வேண்டும்”.
அவர்கள் அந்தப் பதவிக்கு தகுதியானவர்கள் இல்லை. மாணவர்களின் வாழ்க்கையில் பந்தாடியுள்ளனர். இது நாடே வெட்கப்படக்கூடிய வருந்தத்தக்க செயல். இந்தியா மாதிரியான மக்கள் தொகை அதிகம் கொண்ட நாட்டில் கல்வியை மேம்படுத்தி மாணவர்களுக்குச் சிறந்த முறையில் வழங்க வேண்டும். தயவு செய்து கல்வியில் அரசியல் செய்ய வேண்டாம், எதிர்கால சந்ததியினரைக் காப்பாற்றுங்கள்.

இதன்மூலம் JEE மெயின்ஸ், அட்வான்ஸ்டு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று, பிளஸ் டூவில் மதிப்பெண் குறைவாகப் பெறுவதால் வாய்ப்பை இழக்கின்றனர். இது இந்த புதிய OSM முறையின் தவறு, மாணவர்களின் தவறில்லை. அதனால் அந்த மாணவரால் ஐஐடிக்கு போக முடியாமல் போகிறது.
எனவே இதற்கு ஒரே வழி, ஏற்கனவே விடைத்தாள்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலந்து இருக்கும், அதனை முறையாக எடுத்து அந்தந்த மாணவர்களிடம் அது அவர்களுடையதா என உறுதி செய்து மீண்டும் திருத்த வேண்டும்.
ஆனால் அதனை எடுத்துச் சரிசெய்வது முடியாத காரியம். அதனால் மறுதேர்வு நடத்த வேண்டும், இல்லையேல் இந்தத் தேர்வுகளை நடத்தும் பொறுப்பை அந்தந்த மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும். இந்தக் குளறுபடி, JEE கலந்தாய்வு, நீட் மறுதேர்வு என மாணவர்களுக்குப் பலவகையில் இடையூறாக இருக்கும், அதனையும் கருத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.