சிறிய கடைகளுக்கும் உரிமம்: கட்டாய சட்டத்தை திரும்ப பெற தலைவர்கள் வலியுறுத்தல் | Political Leaders urged to withdrawal of mandatory law Licensing for small shops too

1371246
Spread the love

சென்னை: கி​ராம ஊராட்​சிகளில் சிறிய கடைகளுக்​கும் உரிமத்​தைக் கட்​டாய​மாக்​கும் சட்​டத்தை தமிழக அரசு திரும்​பப் பெறவேண்​டும் என்று தலைவர்கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: இது உழைக்​கும் வர்க்​கத்​தின் மீது நிகழ்த்​தப்​படும் வன்​முறை. விலை​வாசி உயர்வு, மின்​கட்​ட​ணம், குடிநீர் கட்​ட​ணம், பால்​விலை உயர்வு என தள்​ளாடும் சிற்​றுண்​டிக் கடைகளை மொத்​த​மாக இழுத்து மூட முடிவு செய்து விட்​டதா திமுக அரசு.

ஏழை, எளிய மக்​களின் தோள்​களின் மீது நிதிச் சுமை ஏற்​றப்​படு​வதை இனி​யும் வேடிக்கை பார்க்க முடி​யாது. இந்த உரிமக் கட்டண உயர்வை திரும்​பப் பெறா​விட்​டால் தமிழக பாஜக சார்​பில் மாநிலம் முழு​வதும் போராட்​டங்​கள் முன்​னெடுக்​கப்​படும்.

பாமக தலை​வர் அன்​புமணி: தமிழகத்​தின் கிராம ஊராட்​சிகளில் 48 வகை​யான உற்​பத்தி தொழில்​கள் செய்​வதற்​கும், தையல் தொழில், சலவைக் கடைகள் போன்ற 119 வகை​யான சேவைத் தொழில் செய்​வதற்​கும் உரிமம் பெறு​வது கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது. அதிக வரு​வா​யும், லாப​மும் தரக்​கூடிய கடைகளுக்கு உரிமம் பெறு​வதை கட்​டாய​மாக்​கு​வ​தில் தவறு இல்​லை.

ஆனால், வாழ்​வா​தா​ரத்​துக்​காக செய்​யப்​படும் தொழில், வணி​கத்​துக்​கும் உரிமம் பெற வேண்​டும் என்​பது ஏழை மக்​கள் மீது நடத்​தப்​படும் தாக்​குதல் ஆகும். எனவே, இதை திரும்​பப் பெற வேண்​டும்.

தமிழ்​நாடு வணி​கர் சங்​கங்​களின் பேரமைப்பு தலை​வர் ஏ.எம்​.விக்​கிரம​ராஜா: கிராமப்​புற பஞ்​சா​யத்​துப் பகு​தி​களில் உள்ள சிறு, குறு கடைகளுக்​குக்கூட உரிமங்​கள் கட்​டா​யம் என தமிழக அரசு அறி​வித்​திருப்​பது அதிர்ச்​சி​யை​யும், வேதனையை​யும் அளிக்​கின்​றது. குடும்​பச் சூழலில் வீட்​டோடு சில்​லரை வணி​கம் செய்​து​வரும் அடித்​தட்டு வணி​கர்​களை​யும் இந்த அறி​விப்பு பாதித்​து​விடும்.

எனவே, வணி​கர்​களின் நிலை கரு​தி​யும், சாமான்ய வணி​கரின் வாழ்​வா​தா​ரம் கரு​தி​யும் இவ்​வறி​விப்பை தமிழக அரசு உடனடி​யாக திரும்​பப்​பெற வேண்​டும். இவ்​வாறு தெரி​வித்​துள்​ளனர்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *