சிறையில் அடைக்க கொண்டு செல்லப்பட்டவர் 2வது முறையாக தப்பி ஓட்டம்; போலீஸாரின் அலட்சியம்தான் காரணமா? | Man being taken to prison escapes for the second time; was police negligence the cause

Spread the love

இந்த நிலையில், ஜாமினில் வெளிவந்த நிரஞ்சன் சரிவர ஆஜராக இருந்ததால் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்த நிலையில், நிரஞ்சனை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இதனை தொடர்ந்து நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து போலீஸார் நிரஞ்சனை கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்க அழைத்துச் சென்றபோது, சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஹோட்டலில் சாப்பிடச் சென்றபோது நிரஞ்சன் தப்பி ஓடியுள்ளார்.

விளாத்திகுளம் காவல் நிலையம்

விளாத்திகுளம் காவல் நிலையம்

ஏற்கனவே ஒருமுறை கோவில்பட்டி கிளைச் சிறையில் இருந்து தப்பித்து போலீஸார் நிரஞ்சனைக் கைது செய்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக போலீஸாரிடம் இருந்து தப்பி உள்ளார்.

பின்னர், போலீஸாரின் தீவிர தேடலுக்குப் பிறகு கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். காவல்துறையினர் அலட்சியம் காரணமாக இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

அதே நேரத்தில் இரண்டாவது முறையாக கைதி தப்பியோடினாரா? அல்லது தப்ப விட்டார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *