சிவகங்கை அருகே செப்டம்பர் 16 அன்று 2 இளைஞர்கள் கொடூரமாக வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில், தொடர்புடைய 5 நபர்களை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
கொலை பின்னணி
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள குருந்தனிவாரியேந்தலைச் சேர்ந்த தெய்வேந்திரன் (27) மற்றும் சிறுவேலங்குடியைச் சேர்ந்த பூப்பாண்டி (25) ஆகிய இருவரும், சிவகங்கை – காளையார்கோவில் சாலையில் உள்ள பழமலைநகர் – கொடிக்காடு கண்மாய் பகுதியில் தெய்வேந்திரனின் புதிய காரை நிறுத்திவிட்டு மது அருந்திக் கொண்டிருந்தனர்.
அப்போது, இருசக்கர வாகனங்களில் வந்த 8 பேர் கொண்ட கும்பல், தெய்வேந்திரன் மற்றும் பூப்பாண்டியை கண்மாய்க்குள் ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். மேலும், அவர்களின் புதிய காரையும் அந்த கும்பல் அடித்து நொறுக்கிச் சிதைத்துவிட்டுத் தப்பியோடியது.
போலீஸாரின் அதிரடி விசாரணை – கைது:
தகவலறிந்து வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா தலைமையிலான போலீஸார் உடல்களைக் கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மோப்ப நாய் “லைலா’ மற்றும் தடயவியல் நிபுணர்கள் மூலம் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.