அதற்குப் பிறகு, என்னோட தந்தை பஞ்சாபிகேசன் இந்த உணவகத்தைப் பொறுப்பேற்று நடத்தினார். அவரும் தன்னுடைய முன்னோர்கள் கடைப்பிடித்த அதே தரத்தையும் நம்பிக்கையையும் தொடர்ந்து காப்பாற்றினார். காலப்போக்கில் பல புதிய உணவகங்கள் வந்தாலும், எங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை குறையவில்லை. தலைமுறை தலைமுறையாக மக்கள் எங்கள் உணவகத்தைத் தேடி வந்துகொண்டே இருந்தார்கள்.

இப்போது நான்காவது தலைமுறையாக நான், சிவராமகிருஷ்ணன், இந்த உணவகத்தை நடத்தி வருகிறேன். உணவின் தரத்தையும் சுவையையும் பராமரிப்பதோடு, உணவுப் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI தொடர்பான சான்றிதழையும் பெற்றிருக்கிறோம். எங்களை நம்பி வரும் வாடிக்கையாளர்களுக்கு நல்ல உணவை வழங்க வேண்டும் என்பதுதான் இன்றைக்கும் எங்களுடைய முதன்மையான பொறுப்பு.
இப்போ காலம் மாறிப்போச்சு. எங்கு பார்த்தாலும் புதுப்புது உணவகங்கள், பலவிதமான உணவுகள் என்று உணவுத் துறை வளர்ந்துகிட்டே இருக்கு. ஆனாலும், இத்தனை மாற்றங்களுக்கு மத்தியிலும் எங்களுடைய உணவகம் தொடர்ந்து இயங்கிக்கிட்டு இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் எங்கள் முன்னோர்கள் உருவாக்கிய நம்பிக்கையும், வாடிக்கையாளர்கள் எங்களுக்கு அளித்த ஆதரவும்தான்” எனப் பகிர்ந்தார்.
சைவ உணவாக இருந்தாலும், அதைச் சுவையாகவும் தரமாகவும் வழங்கினால், மக்கள் தொடர்ந்து விரும்பி வருவார்கள் என்பதற்கு கிருஷ்ணா பவன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.