சீனாவில் ரோபோக்களுக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டி, ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படவுள்ளது.
சீனாவில் ஹாங்சோ மாகாணத்தைச் சேர்ந்த ரோபோக்கள் தயாரிப்பு நிறுவனமான யூனிட்ரீ ரோபோட்டிக்ஸ், உலகில் முதன்முறையாக ரோபோக்களுக்கு இடையே குத்துச்சண்டை போட்டி நடத்த முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, முன்னோட்டத்தையும் நடத்தி விட்டனர்.
மனித உருவிலான இரண்டு ரோபோக்கள், குத்துச்சண்டை போட்டியாளர்களைப் போன்று கையுறைகள், தலைக்கவசத்தை அணிந்துகொண்டு, போட்டியிடும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. போட்டியில் கலந்து கொள்வதற்காக, ரோபோக்களுக்கு மனிதர்களைப்போல நடக்கவும், ஓடவும், நடனமாடவும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான உடல் வலிமை சார்ந்த போட்டிகளில் ஈடுபடுத்தப்படுவதன் மூலம், ரோபோக்களின் வேகம், செயல்திறன் ஆய்வு செய்யப்பட்டு, அதனை அதிகரிப்பது குறித்தும் அறிய முடியும்.