சீறிப்பாய்ந்த குதிரைகள்; அசரவைத்த போட்டியாளர்கள் – ஈரோட்டில் கவனம் ஈர்த்த குதிரையேற்றப் போட்டி! | Erode: Horse Riders Stun Crowd with Show Jumping, Dressage, Barrel Racing, Pole Bending

Spread the love

இந்த அகில இந்தியக் குதிரையேற்றப் போட்டி பல்வேறு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் Show Jumping, Dressage, Barrel Racing, Pole Bending உள்ளிட்ட போட்டிகள் இடம்பெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் அடுத்தகட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றனர்.

குதிரையேற்றத்தில் Dressage, Show Jumping, Eventing ஆகியவை ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறும் முக்கியப் பிரிவுகளாகும். Dressage போட்டியில் குதிரையின் கட்டுப்பாடு, இயக்கம் மற்றும் வீரரின் துல்லியம் ஆகியவை முக்கியமாகக் கருதப்பட்டன. Show Jumping போட்டியில் பல்வேறு உயரங்களில் அமைக்கப்பட்ட தடைகளை, குறிப்பிட்ட நேரத்திற்குள் குதிரையுடன் இணைந்து தாண்ட வேண்டியிருந்தது. தடைகளைத் தட்டாமல் அல்லது தொடாமல் தாண்டுவது போட்டியின் முக்கிய அம்சமாக இருந்தது.

இப்போட்டியில் இந்தியாவின் மகாராஷ்டிரா, தெலங்கானா, புனே, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஈரான், அயர்லாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் வீரர்கள் பங்கேற்றனர்.

போட்டியின் ஒரு பகுதியாக 40 முதல் 60 சென்டிமீட்டர் மற்றும் 80 முதல் 90 சென்டிமீட்டர் உயரம் கொண்ட தடைகள் அமைக்கப்பட்டிருந்தன. வீரர்கள் குதிரைகளுடன் இணைந்து, எந்தத் தடையையும் தட்டாமல் அல்லது தொடாமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் தடைகளைத் தாண்டினர்.

குதிரைகளின் வேகம், வீரர்களின் திறமை, கட்டுப்பாடு மற்றும் துல்லியம் என பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டி, பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *