"சுய கௌரவத்தையும் ஈகோவையும் விட்டுக்கொடுத்து ஒன்று சேருவார்கள் என்று.!" – மாணிக்கம் தாகூர்

Spread the love

தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்த நேரத்தில் அதிமுக கூட்டணி மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

“தமிழ்நாடு மாற்றத்திற்காக வாக்களித்துள்ளது, அதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

சரணடைந்த பழனிசாமியோடு சேர்த்து, என்.டி.ஏ (NDA) கூட்டணியை தமிழ்நாடு மீண்டும் நிராகரித்துள்ளது. வெறுப்பு அரசியல் உள்ளே நுழைவது தடுக்கப்பட்டுள்ளது.

மாணிக்கம் தாகூர் பதிவு
மாணிக்கம் தாகூர் பதிவு

இப்போது, மக்களின் இந்தத் தீர்ப்பில் எந்தவித முறைகேடும் நடக்காமல் தடுப்பது மதச்சார்பற்ற சக்திகளின் கடமையாகும்.

ஆர்.எஸ்.எஸ்-ன் முகவர்களிடமிருந்தும், வெறுப்பு அரசியலில் இருந்தும் தமிழ்நாட்டைப் பாதுகாக்க மதச்சார்பற்ற சக்திகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

தமிழ்நாட்டைப் பாதுகாக்க, அனைவரும் தங்கள் சுய கௌரவத்தையும் ஈகோவையும் விட்டுக்கொடுத்து ஒன்று சேருவார்கள் என்று நம்புகிறேன்.” என்றிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *