`சுஷ்மிதா என் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக இருந்தார்; அது சிறப்பான ஓர் உறவு’- மனம் திறந்த லலித் மோடி \ Sushmita Sen was very special to me former -IPL Chief Lalit Modi opensup

Spread the love

நான் வெளியிடுவேன் என்று அவர் நினைக்கவில்லை

இருவரும் உறவில் இருப்பது குறித்த புகைப்படங்களை வெளியிட்டது குறித்து கூறுகையில், ”சுஷ்மிதா சென் முன்னிலையில் அவர் எதிர்பாராத நேரத்தில் நாங்கள் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை சமூக ஊடகத்தில் வெளியிட்டேன். நான் வெளியிடுவேன் என்று அவர் நினைக்கவில்லை. நாங்கள் விமானத்தில் ஏதோ ஒன்றைப் பற்றி வாக்குவாதம் செய்துகொண்டிருந்தோம். அப்போது அவர், ‘நீங்கள் இதை(புகைப்படங்கள்) பதிவிடப் போவதில்லை’ என்று சொன்னார்.

நான் சிரித்துக்கொண்டே அவர் கண் முன்பு மொபைல் பொத்தானை அழுத்தி புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்தேன். நாங்கள் தரையிறங்குவதற்குள், பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்தது. ஆனால் அதில் எந்தத் தவறும் இல்லை. அதை அகற்றுமாறு அவர் என்னிடம் ஒருபோதும் கேட்கவில்லை, நானும் அதைச் செய்ய ஒருபோதும் நினைக்கவில்லை. அதற்காக நான் வருத்தப்படவில்லை. நான் இந்த அளவுக்கு வளர்ச்சியடைந்து இருக்கிறேன் என்றால் அதற்கு சுஷ்மிதா சென் தான் காரணம். எனவே சுஷ்மிதா சென் எப்போதும் எனக்கு சிறப்புதான்.

நான் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு அவர்தான் காரணம். அவர் மிகவும் விசேஷமானவர். அந்தக் காலகட்டத்தில் அவர் என் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக இருந்தார். எங்களுக்கு இடையேயான தூரம் மிக அதிகமாக இருந்தது. அவருடைய தொழில் வாழ்க்கை இந்தியாவில் இருந்தது, என் வாழ்க்கை லண்டனில் இருந்தது. அது மிகவும் சிறப்பான ஓர் உறவாக இருந்தது. அவரைப் பற்றிய இனிமையான நினைவுகள் எனக்கு உண்டு. அவருக்கு நல்வாழ்த்துகளைத் தவிர வேறு எதையும் நான் கூற விரும்பவில்லை. அவர் ஓர் அற்புதமான பெண்மணி” என்று குறிப்பிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *