இயக்குநர் பாரி இளவழகன் எனக்கு அதை அழகாகச் சொல்லியும் தந்தார். ஆனா, அவர் பேசச் சொல்வதைத் தாண்டி, நடக்குறதுலையும் பெங்களூரு தமிழ்ல இருக்கணும்னு சொல்வார் (சிரித்துக்கொண்டே)” என்றவர், “எங்களுடைய ‘பரிதாபங்கள்’ டீம் நடிச்சிருக்கிற படங்கள் அடுத்தடுத்த வாரங்கள்ல வெளியாவது ரொம்பவே சந்தோஷம்.
சுதாகர், டிராவிட் நடிச்சிருந்த ‘இதயம் முரளி’ போன வாரம் ரிலீஸ் ஆகியிருந்தது. இந்த வாரம் நான் நடிச்சிருக்கிற ‘அன்பே டயானா’ வெளியாகுது.
இவ்வளவு பரபரப்புக்கு மத்தியிலும் நாங்க எல்லோரும் சேர்ந்து ஷூட் பண்ணிட்டுதான் இருக்கோம். சுதாகரும் நானும் பக்கத்து பக்கத்து வீட்டுலதான் இருக்கோம். நாங்க அடிக்கடி மீட் பண்ணுவோம்.

டிராவிட் இப்போ ‘சூர்யா 47’ படத்தின் எழுத்து வேலைகள்ல பிஸியாக இருக்கார். ஆனா, எங்க சப்ஸ்கிரைபர்ஸுக்காகத் தொடர்ந்து சேர்ந்து வீடியோ ஷூட் பண்ணிட்டுதான் இருக்கோம்.
எங்க மூணு பேருடைய ஆசையும் நடிப்பின் பக்கம்தான் இருக்கும். அதுக்காகத்தான் இத்தனை வருஷமா உழைச்சோம். அதனால, அதைச் சார்ந்துதான் இப்போ இயங்கிட்டு வர்றோம்.
அதையும் தாண்டி, சினிமா நம்மை எங்கு கூட்டிச் செல்லுதோ, அங்கேயும் பயணிக்க ஆர்வமாக இருக்கோம். வருங்காலத்துல ஒரு படத்தை இயக்கணும்னு எங்களுக்குள்ள ஆசை இருக்கு. பார்ப்போம்!” என்றார் உற்சாகத்துடன்.