செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆளுநர் ஒப்புதல்|Big Setback for Senthil Balaji as Governor Gives Approval

Spread the love

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதுள்ள பண மோசடி வழக்கை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதியளித்துள்ளார், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்.

2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை, அதிமுக அரசாங்கத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார் செந்தில் பாலாஜி. அப்போது பலரிடம் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட வேலைகளை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த மோசடி குறித்து புகார் பதிவாக, செந்தில் பாலாஜி மீது பண மோசடி வழக்குகள் தொடரப்பட்டன.

 ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

இந்த வழக்குகளின் விசாரணை சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்குகளுக்காகத்தான் செந்தில் பாலாஜி கடந்த 2023-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த வழக்குகளின் விசாரணை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

சமீபத்திய உச்ச நீதிமன்ற உத்தரவு படி, “பொது ஊழியர்கள்’ மீது குற்றம் சாட்டப்பட்டால், அந்த வழக்கை விசாரிக்க சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *