சென்னை வந்த பிரதமர் மோடி உரை | PM Modi In Chennai: Inaugurates Metro Line & IIT Brain Research Centre

Spread the love

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க, இன்று பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருக்கிறார். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, முதல்வர் விஜய் வரவேற்றார்.

முதலில், பூந்தமல்லி – வடபழனி இடையேயான புதிய மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார். பிறகு, சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கி வைத்த பிறகு நடைபெற்ற நிகழ்வில் முதல்வர் விஜய், பிரதமர் மோடி ஆகியோர் பேசியிருக்கிறார்கள்.

பிரதமர் மோடி பேசுகையில், “இன்று சென்னையில் உங்களுடன் இருப்பது எனக்குப் பேருவகையை அளிக்கிறது. இன்றைய நிகழ்வு ₹13,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடர்பானது.

புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், பல நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைவதோடு, தமிழ்நாட்டு மக்களுக்கு எனது நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றிலிருந்து நவராத்திரி புனித காலம் தொடங்குகிறது. சிவனோடு கூடவே சக்தி பீடம் கொண்டிருக்கும் பவித்திரமான பூமியாம் தமிழ்நாட்டில் நான் இருக்கிறேன். இங்கு வருவதற்கு முன்பாக ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பகவான் சிவபெருமானின் நல்லாசிகளைப் பெறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

சற்று முன்பாக சென்னை ஐஐடியில் மூளை ஆய்வு மையத்தைப் பார்வையிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இத்துறையில் நடைபெறும் ஆய்வுகள் பொது சுகாதாரத் துறையில் பல புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தரும். மேலும் சென்னை மெட்ரோ விரிவாக்கத்தையும் அர்ப்பணித்திருக்கிறோம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *