‘செல்லமே மகளே’; பெண் குழந்தை பிறந்திருக்கும் செய்தியை பகிர்ந்த அபிஷன் ஜீவிந்த்! |tourist-family-director-abishan-jeevinth-blessed-with-a-baby-girl

Spread the love

அபிஷன் ஜீவிந்துக்கும் இவருடைய நீண்ட நாள் காதலியான அகிலா என்பவருக்கும் கடந்தாண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றிருந்தது.

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் புரோமோஷன் நிகழ்வில், அபிஷன், அகிலாவுக்கு ப்ரொபோஸ் செய்திருந்த வீடியோ வைரலானது பலருக்கும் நினைவிருக்கலாம்.

இந்தத் தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இத்தகவலை அபிஷன் ஜீவிந்த் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் பகிர்ந்திருக்கிறார்.

திரைத்துறையினர் பலரும் அபிஷன் ஜீவிந்துக்கு தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *