“சொத்துகளைப் பணிப்பெண்ணுக்கு கொடுத்துவிடுங்கள்” – மூத்த நடிகரின் ஆசையும் குடும்பத்தாரின் முடிவும்! |It has been decided to hand over the assets of the late actor Ranganath to his domestic help.

Spread the love

தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர் ரங்கநாத் (66) தற்கொலையைத் தொடர்ந்து அவரின் சொத்துகள் அனைத்தும் அவரின் பணிப்பெண்ணிடம் ஒப்படைக்கப்படும் என அவரின் மகன் தெரிவித்திருக்கிறார்.

1949-ல் சென்னையில் பிறந்த இவர், ரயில்வே துறையில் பயணச்சீட்டு பரிசோதகராகத் வேலையைத் தொடங்கினார். பின்னர் சினிமா மீது கொண்ட ஈர்ப்பால், 1969-ல் பாபு இயக்கத்தில் வெளியான “புத்திமந்துடு’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பின் 40-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்த ரங்கநாத், பின்னாளில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் ஜொலித்தார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இவரது திரையுலக வாழ்க்கையில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் ரங்கநாத்

நடிகர் ரங்கநாத்

திரையுலகில் வெற்றிகரமாக வலம் வந்த ரங்கநாத்திற்கு, 2009-ம் ஆண்டு அவரது மனைவி மறைந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. மனைவியின் பிரிவால் அவர் கடும் மன அழுத்தத்திற்கு ஆளானார். இதன் காரணமாக அவர் அடிக்கடி தற்கொலை பற்றிப் பேசத் தொடங்கியதால், அவரது குடும்பத்தினர் அவரை உளவியல் நிபுணர்களிடம் அழைத்துச் சென்று மனநல ஆலோசனைகளையும் வழங்கினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *