‘சொத்தைக் கொடுக்காதே’ என்ற அறிவுரைகளும், இன்றைய பிள்ளைகளின் நிஜப் பாசமும் | Bridging the Generational Gap with Love and Trust

Spread the love

இந்தப் பூவுலகமும் அதில் வாழும் மனிதர்களும் ஒரே மாதிரியானவர்கள் அல்லர்.கண்டங்களும்,நாடுகளும் தட்ப வெப்ப நிலையால் மாறுபடுவது போலவே,மனிதர்களும் நிறத்தாலும்,குணத்தாலும் வேறுபடுகிறார்கள்.

கலாச்சாரம்,நாகரீகம்,பழக்க வழக்கங்கள் ஆகியவை மாறுபடுகின்றன.

அதற்கேற்பவே மக்கள் வாழ்க்கை முறையும் அமைந்து விடுகிறது.பனி,குளிர்

சில இடங்களில்.வெயில்,வியர்வை,வெப்பம் வேறு சில இடங்களில்.இரண்

டிற்கும் இடைப்பட்ட மிதமான சீதோஷ்ணம் சில நாடுகளில்.ஆனால் எல்லா மக்களாலும் விரும்பப்படுவது அமைதியும்,நிம்மதியுமே!

அந்த அமைதியும்,நிம்மதியும் குடும்ப வாழ்க்கையில்தான் மிகுதி என்பதாலேயே,மக்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுகிறார்கள்.தன் குடும்பத்தைத் தழைக்க வைப்பதற்காக அயராது உழைக்கிறார்கள்.

‘நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்’

என்று சொல்லி,நல்ல குடும்பங்களைப் பெருமைப்படுத்தினார்கள்.

‘இல்லறமே நல்லறம்’என்றும் எடுத்துரைத்தார்கள்.

ஐம்பது,அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, ஒரே குடும்பத்தில் ஏழெட்டுப் பிள்ளைகள் சர்வ சாதாரணம்.ஒரு குடும்பத்திலேயே சுமார் 10,12 பேர் இருப்பார்கள்.கூட்டுக் குடும்பம் என்றால் கேட்கவே வேண்டாம்.

இப்பொழுது நியூக்லியஸ் பேமிலி என்கிறார்கள்.நம் குழந்தை விளையாட, அடுத்த வீட்டுக் குழந்தையின் ஒத்துழைப்பும் அவசியம்.

அப்பொழுதெல்லாம் வீட்டிற்குள்ளேயே ஒரு டீம்இருக்கும்.

ஆனால்,காலப்போக்கில் அதிகக் குழந்தைகளை வளர்ப்பது சிரமம் ஆகிப் போனதாலும்,குடும்பக் கட்டுப்பாட்டு முறையை அரசு வலியுறுத்தியதாலும் இரண்டு குழந்தைகளே போதுமென்ற மன நிலைக்கு மக்கள் வந்து விட்டார்கள்.தற்காலத்திலோ,ஒரு குழந்தையே போதுமென்ற சூழ்நிலைக்குத் திருமண ஜோடிகள் தள்ளப்பட்டுள்ளார்கள்.பெருகி வரும் குடும்பச் செலவுகளே அவர்களை இவ்வாறு சிந்திக்கத் தூண்டுகின்றன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *