‘சோனியாவுக்கு நான் வாழ்த்து சொல்லி இருக்கிறேன், ஆனால் எனக்கு அழைப்பு.!’- ஸ்டாலின் கூறியதென்ன? | dmk stalin about vijay and soniya gandhi book event

Spread the love

திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார்.

மேகதாது விவகாரத்தில் நீங்கள் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் முதல்வர் எதுவும் தெரிவிக்காமல் இருக்கிறார். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன? என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், ” அவர் எப்போது பேசியிருக்கிறார். நீங்கள் தான் அவரை கேட்க வேண்டும். கண்டு கொள்ளாமல் இருக்கிறார் என்றால் அவருக்கு இதுபற்றி எதுவும் தெரியாது. அதனால் தான் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.

சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழா

சோனியா காந்தி நூல் வெளியீட்டு விழா

தொடர்ந்து சோனியா சுயசரிதை புத்தகம் வெளியீட்டிற்கு வாழ்த்து சொன்னீர்களா? உங்களுக்கு அழைப்பு வந்ததா? என்று கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு, ” சோனியாவுக்கு நான் வாழ்த்து சொல்லி இருக்கிறேன். கடிதமும் எழுதி இருக்கிறேன்.

எனக்கு அழைப்பிதழ் வரவில்லை. போனில் தொடர்பு கொண்டு எனது உதவியாளரிடம் சொல்லி இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் அவருக்கு நான் வாழ்த்து அனுப்பி இருக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *