இந்த விழாவில் பங்கேற்கும் உங்கள் எண்ணிக்கை சுமார் 800 முதல் 900 வரை இருக்கும் என்று நினைக்கிறேன். இன்றைய இளம் தலைமுறையினர் மக்கள், பெற்றோர், ஆசிரியர்கள், சமூகம் மற்றும் நாடு ஆகியவற்றைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். உங்களை இங்கே வரவேற்பது எனக்குக் கிடைத்த பெரும் கௌரவம்; உங்களில் பலர் என்னிடம் ‘வணக்கம்’ என்றீர்கள்.
சிலர், ‘உங்கள் கைகளால் பட்டம் பெறுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்’ எனத் தெரிவித்தீர்கள். இதை அனைவரும் பாராட்ட வேண்டும். இதில் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும். உங்களுக்குத் தேவையானவை மற்றும் நீங்கள் விரும்புபவை அனைத்தையும் உங்களுக்கு வழங்குவதே எனது முக்கிய கடமையாகும். உங்களைச் சந்தித்து, உங்களைப் புரிந்துகொள்வதே எனது நோக்கம்.
2047-ம் ஆண்டு என்பது இன்றிலிருந்து சரியாக 20 ஆண்டுகள் கொண்ட ஒரு காலக்கட்டம். அதற்குள் நமது பிரதமரின் கனவு மட்டுமல்லாமல் நம் அனைவரின் கனவும் நனவாகப் போகிறது. இதை நோக்கி நாம் எவ்வாறு முன்னேறுவது என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும. தாமதிக்காமல், நம் மக்கள் மற்றும் நம் நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு நாம் செயல்பட வேண்டும். நாட்டுக்காக நான் என்ன செய்யப் போகிறேன் என்று நீங்களே முடிவு செய்யுங்கள். உங்களிடம் திறமை இருக்கிறது.
வெறும் தகவல்கள் மட்டுமல்லாமல் உண்மையான அறிவும் உங்களிடம் உள்ளது. எனவே, அதைச் செயல்படுத்த முயற்சி செய்யுங்கள். நம்மால் மட்டுமே இதைச் செய்ய முடியும். அதற்காகத்தான் நான் இன்று உங்களைச் சந்திக்க இங்கு வந்துள்ளேன். வெறும் பேச்சாக மட்டும் பேசுவதில் எனக்குத் திருப்தி இல்லை. உங்களுடன் ஒரு கலந்துரையாடலை மேற்கொள்ளவும், மீண்டும் நேரில் வந்து உங்களுடன் நாள் முழுவதும் பேசவும் நான் விரும்புகிறேன். காரணம் நீங்கள்தான் இந்த நாட்டின் எதிர்காலம்” என்று ஆளுநர் அர்லேகர் பேசினார்.