ஜம்மு காஷ்மீரில் பதற்றம்.. அதிகாலையிலேயே துப்பாக்கி சண்டை.. வேட்டையாடப்படும் பயங்கரவாதிகள்! | Jammu Kashmir Encounter: Gun fights starts with terrorists and Security forces in Kulgam

Spread the love

India

oi-Nantha Kumar R

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் முகாம்களை உளவு பார்த்த 2 பயங்கரவாதிகள் அடுத்தடுத்து கொல்லப்பட்ட நிலையில் இன்று அதிகாலையில் மீண்டும் பயங்கரவாதிகளுக்கும், ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை வெடித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் தற்போது மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குல்காம் மாவட்டத்திற்குள் பயங்கரவாதிகள் நுழைந்து சிஆர்பிஎஃப் படை வீரர்களின் முகாம்களை உளவு பார்ப்பதாக தகவல்கள் கிடைத்தன.

jammu kashmir terrorist security forces

இதையடுத்து ஜம்மு காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். நேற்று முன்தினம் லாரோ பகுதியில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் லத்தீப் பட் மற்றும் அவனுடன் சென்ற உமர் நிசார் தார் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலையிலும் குல்காம் மாவட்டத்தில் கடும் துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது.
இதனை காஷ்மீர் போலீசார் உறுதி செய்துள்ளனர். காஷ்மீர் போலீசாரின் அதிகாரப்பூர் எக்ஸ் பக்கத்தில் இன்று அதிகாலை 4.51 மணிக்கு முக்கிகய பதிவு ஒன்று வெளியிடப்பட்டது.

அதில், ”குல்காமில் பயங்கரவாதிகளுக்கு எதிராக என்கவுண்ட்டர் பணியை ஜம்மு காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தொடங்கி உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது. தற்போது குல்காமில் பயங்கரவாதிகள் – ஜம்மு காஷ்மீர் போலீசார் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. இது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக நேற்று முன்தினம் சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் லத்தீப் பட் மற்றும் உமர் நிசார் தார் ஆகியோர் ஜம்மு காஷ்மீரில் மிர் பார், அக்ரான், ஹப்லிஸ், கிலாம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு படையினரின் செயல்பாட்டை உளவு பார்த்தனர். இது சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த கேமரா பதிவை ஜம்மு காஷ்மீர் போலீசார் இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது இருவரும் மோட்டார் சைக்கிளில் அக்ரான் பகுதியில் உள்ள சிஆர்பிஎஃப் நாகா முகாமில் தாக்குதல் நடத்தினர்.இதில் ஒருவீரர் பாதிக்கப்பட்ட நிலையில் 2 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

இதில் லத்தீப் பட் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பில் செயல்பட்டு வரும் நிலையில் உமர் நிசார் தார் லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான ‘தி ரெசிஸ்டென்ட் ஃப்ரண்ட்’ என்ற அமைப்பில் செயல்பட்டு வந்துள்ளார். உமர் நிசார் தார் தான், லஷ்கர் பட்டிற்கு 6 முதல் 6 மாதங்கள் அடைக்கலம் கொடுத்துள்ளான். இதற்காக உமர் நிசார் தார் தனது வீட்டை விட்டு வெளியேறி உள்ளான். அவன் மாயமாகி உள்ளதாக குடும்பத்தினர் குல்காம் போலீசில் புகாரளித்த நிலையில் பயங்கரவாதி லத்தீப் பட் உடன் சேர்ந்து செயல்பட்டு பாதுகாப்பு பயைினரின் என்கவுண்ட்டருக்கு பலியாகி உள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *