கார் விபத்தில் சிக்கி, “சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி அகால மரணமடைந்திருப்பது தமிழ் திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
அவருடைய சொந்த ஊரான ராஜஸ்தானுக்கு அவர் சென்றிருந்த நிலையில், அங்கு நேற்று மதியம் நேரிட்ட கார் விபத்தில் அவர் உயிரிழந்திருக்கிறார்.
பல்வேறு முக்கியமான திரைப்படங்களைத் தயாரித்திருக்கும் ஆர்.பி. சௌத்ரிக்கு, கே.எஸ். ரவிக்குமார், விக்ரமன், லிங்குசாமி உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்களை அறிமுகப்படுத்திய பெருமையும் உண்டு.
தமிழ் திரைத்துறையினர் பலரும் இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். விஜய்யின் ‘ஜில்லா’ திரைப்படம்தான் சூப்பர் குட் பிலிம்ஸின் 85வது திரைப்படம்.
இப்படத்தின் இயக்குநர் ஆர்.டி.நேசனிடம் தயாரிப்பாளர் ஆர். பி. செளத்ரி உடனான நினைவுகள் பற்றி கேட்டறிந்தோம்.