இயக்குநர் நெல்சன் சார் செட்டில் எப்போதும் ஜாலியாகக் கலாய்த்துக் கொண்டுதான் இருப்பார். நான் தினமும் ஊத்தாப்பம்தான் சாப்பிடுவேன், அதை வைத்தே என்னை இயக்குநர் நெல்சன் சார் கிண்டல் செய்வார்” என்றவர், தன்னுடைய பெற்றோர் குறித்து, “யூடியூப் சேனல்தான் என்னை இந்த இடத்திற்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது.
அதைத் தவிர நாங்கள் ஒரு ஸ்டார்ட் அப் வைத்திருக்கிறோம். ஆனால், இன்னும் அதிலிருந்து வருமானம் எதுவும் வரவில்லை” என்றார்.
தொடர்ந்து பேசியவர், “சினிமாவில் இதுவரை சப்போர்ட்டிங் கேரக்டர்களில்தான் நடித்து வருகிறேன். ஆனால், குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொண்ட ஒரு படத்தில் முதன்மைக் கதாபாத்திரமாக நடிக்க வேண்டும் என்பது என் ஆசை.
நான் எப்போதுமே ஜாலியாகத்தான் இருப்பேன். நிறைய புத்தகங்கள் படிப்பேன், கேம்ஸ் விளையாடுவேன். எனக்கு ஒரு காமிக்ஸ் எழுத்தாளராக வேண்டும் என்றும் ஆசை இருக்கிறது.
எதிர்காலத்தில் ஹாரர், ஃபேண்டசி, அட்வென்ச்சர், காமெடி, மிஸ்டரி என எனக்குப் பிடித்த கதைகளை எழுதி அதை நானே இயக்கி விஷுவலாகக் காட்ட வேண்டும் என்றும் ஆசைப்படுகிறேன்” எனப் பகிர்ந்துகொண்டார்.