அவர், “ஆர்.பி. சௌத்ரியோடு நான் படம் பண்ணியதில்லை. ஆனாலும், எனக்கு அவர் ஒரு நெருங்கிய நண்பர். நிறைய முறை நாங்கள் சந்தித்திருக்கிறோம்.
நான்கு மாதங்களுக்கு முன்புகூட, ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் “ஜெயிலர் 2′ படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது என்னைச் சந்திக்க வந்திருந்தார்.
’99 படங்கள் எடுத்துவிட்டேன். 100-வது படத்தை எடுத்து முடித்துவிட்டு ஓய்வு பெறப்போகிறேன். அந்த 100-வது படத்தை நீங்கள்தான் செய்ய வேண்டும். மூன்று கதாசிரியர்கள் இருக்கிறார்கள். நீங்கள் கேட்டுவிட்டு கண்டிப்பாகச் செய்ய வேண்டும்’ என்று கேட்டிருந்தார். நானும் நூறு சதவீதம் சம்மதம் தெரிவித்திருந்தேன்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் சார் என்னிடம் பேசும்போது, ‘ஆர்.பி. சௌத்ரி சார் எத்தனையோ இயக்குநர்களை உருவாக்கியுள்ளார். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து அவருக்கு ஒரு பெரிய விழா நடத்த வேண்டும்’ என்று சொல்லியிருந்தார்.
எத்தனையோ இயக்குநர்களை உருவாக்கி, இந்தத் திரையுலகைக் காப்பாற்றிய ஒரு மாமனிதர். எத்தனையோ தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வேலை கொடுத்தவர் அவர்.
அவர் 99 படங்கள் எடுத்திருந்தாலும், எந்தப் படத்திலும் பெரிய பிரச்னை வந்ததில்லை. அப்படியே பிரச்னைகள் வந்தாலும்கூட, யாரிடமிருந்து பிரச்னை வந்ததோ அவர்களின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று பேசி, அங்கேயே பிரச்னையை முடித்துவிட்டு வருவார்.