ஜெய்ஸ்வாலை டிரேட் செய்யும் ராஜஸ்தான் அணி? பின்னணியில் இப்படியொரு காரணமா.. சங்கக்காரா முடிவு! | With Yashasvi Jaiswal Set to Leave Rajasthan Royals, Why Is the Franchise Parting Ways With an Indian Star?

Spread the love

Cricket

oi-Yogeshwaran Moorthi

மும்பை: ராஜஸ்தான் அணியில் இருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் டிரேட் செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்திய அணியின் நட்சத்திர வீரராக ஜெய்ஸ்வால் இருந்து வரும் சூழலில், ராஜஸ்தான் அணி அவரை டிரேட் செய்ய வேண்டிய காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஐபிஎல் தொடருக்கான ரிடென்ஷன் பட்டியல் வெளியிட இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளது. இதனால் டிரேட் பேச்சுவார்த்தைகள் உச்சத்தில் உள்ளன. குறிப்பாக லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான டிரேட் பேச்சுவார்த்தை தீவிரமாக உள்ளது. இந்த முறை ராஜஸ்தான் அணி பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள தயாராகி வருகிறது.

Yashasvi Jaiswal

குறிப்பாக பவுலிங்கில் அதிக இந்திய வீரர்களை கொண்டு வர முயற்சிக்கிறது. தற்போது ராஜஸ்தான் அணியின் பவுலர்களாக ஆர்ச்சர், பர்கர், மபாகா, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா, ஜடேஜா மற்றும் ரவி பிஷ்னாய் ஆகியோர் இருக்கின்றனர். இதில் ரவி பிஷ்னாய் ஃபார்மின்றி தவித்து வருகிறார். இதனால் வேறொரு இந்திய ஸ்பின்னரை டிரேட் செய்யவும் முயற்சித்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்களில் ஆர்ச்சரை மட்டுமே பயன்படுத்தி கொண்டு, மற்றவர்களின் இடங்களை இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை கொண்டு நிரப்ப முடிவு எடுத்துள்ளது. அதேபோல் டாப் ஆர்டரில் சில வெளிநாட்டு பேட்ஸ்மேன்களையும் கொண்டு வர தயாராகி வருகிறது.

அதன்படி லக்னோ அணியில் அதிகளவில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். இதனால் முகமது ஷமி, மணிமாறன் சித்தார்த் மற்றும் மார்க்ரம் ஆகியோர் மீது கண் வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கு பதிலாக ஜெய்ஸ்வாலை விட்டுக் கொடுக்க ராஜஸ்தான் அணி தயாராகி வருகிறது. ராஜஸ்தான் அணியின் கேப்டன்சியை ஜெய்ஸ்வால் எதிர்பார்க்கிறார்.

ஆனால் ராஜஸ்தான் அணி கேப்டன்சியை ஜெய்ஸ்வாலுக்கு கொடுக்குமா என்பது சந்தேகம் தான். இதனால் ஜெய்ஸ்வாலை டிரேட் செய்துவிட்டு இந்திய பவுலர்களை அணிக்குள் கொண்டு வர தயாராகிவிட்டது. அதேபோல் லக்னோ அணியும் ரிஷப் பண்ட் இடத்தை எளிதாக ஜெய்ஸ்வாலை கொண்டு நிரப்ப முடியும். புதிய கேப்டனாக ஜெய்ஸ்வாலையும் நியமிக்க முடியும் என்று கருதப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *