ஜோக்ஸ் – தோல்வியில் வெற்றி!

Spread the love

“சாட்ஜிபிடி மேல தலைவருக்கு என்ன கோபம்?”

“ `என்னோட வெற்றிக்கு என்ன காரணம்?’னு கேட்டதுக்கு ‘ரீல்ஸ்தான்’னு அதுவும் சொல்லிடுச்சாம்!”

– அம்பை தேவா

“ஒரு லட்சத்து ஐம்பத்தி மூவாயிரத்து நானூத்தி நாற்பத்திரெண்டு பேருக்குப் பண உதவி பண்ணியிருக்கேன்னு தலைவர் சொல்றாராமே…”

“ஓட்டுக்குக் காசு குடுத்ததைத்தான் அப்படிச் சொல்லிட்டுத் திரியிறாரு!”

– மலர்சூர்யா

“தலைவர் எதையும் நம்பவே மாட்டாரு…’’

“அதுக்காக, ‘நான் எப்படி ஜெயிச்சேன்’னு தகவல் அறியும் உரிமைச் சட்டத்துல மனுப்போட்டு கேக்குறது நல்லாவா இருக்கு..!’’

– சென்னா

“சொன்னாக் கேளுங்க தலைவரே… நீங்க நினைக்கிற மாதிரி தேர்தல் ஆணையம் ‘தோல்வியில் வெற்றி’ன்னுல்லாம் சான்றிதழ் தர மாட்டாங்க.”

– ப.சோமசுந்தரம்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *