வேலூரில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
” தமிழகத்தில் இந்துக்களை நாங்கள் அடிமைப்படுத்திவிட்டோம் என்று சில கட்சிகள் மக்கள் மனதில் பதிய வைத்திருக்கிறார்கள். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இந்து கோயில்களில் இந்து மத அடையாளத்தோடு அதாவது விபூதி வைத்துக்கொண்டுதான் கோயிலுக்கு செல்ல வேண்டும், அவர் எந்த மாதமாக இருந்தாலும் சரி… இந்து மதத்தை அரசாங்கம் அழித்துவிட்டோம் என்று அரசாங்கம் நினைத்தால் அது தவறு.

நடந்து முடிந்த தேர்தலில் ஜோசப் விஜய் முதலமைச்சராகி இருக்கிறார். அவரை நான் முதன்முதலில் ஜோசப் விஜய் என சொன்னதற்கு நீங்கள் எல்லாம் என்னை, மத கண்ணோட்டத்தில் பார்க்கிற மாதிரி சொன்னீர்கள். ஆனால், இப்போது உண்மை தெரிந்துவிட்டது. இந்த நிர்வாகத்தில் சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. தமிழ்நாடு அரசு நிர்வாகம் சரியான முறையில் செயல்படவில்லை” என்று கூறியிருக்கிறார்.