டபுள் ஆக்குப்பள்ளி திரைப்படம் எப்படி? குமுதம் விமர்சனக்குழு – Kumudam

Spread the love

வலது பக்கம் ஆண், இடது பக்கம் பெண்… வ அது அர்த்தநாரீஸ்வரர். அதையே உல்டாவாக்கி, ஓர் உடம்பில், 24 மணி நேரத்தில் 12 மணி நேரம் ஆண், 12 மணி நேரம் பெண் என்று மாறினால் எப்படி இருக்கும்? வித்தியாசமான கற்பனை. செம யூத்தாக இயக்கியிருக்கிறார், அஸ்வின் கந்தசாமி. பிறந்த சில நிமிடங்களில் இறந்த ஓர் ஆண் குழந்தை, கடவுள் அருளால் பெண் குழந்தையாகப் புத்துயிர் பெறுகிறது.

அதிலிருந்து அந்தக் குழந்தை காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை பெண்ணாகவும், மாலை ஆறு மணிக்கு மேல் ஆணாகவும் மாறுகிறது. இந்த டூ இன் ஒன் குழந்தையை வளர்க்கும் பெற்றோர்கள் ஒரு சாலை விபத்தில் இறந்துவிட, அழகிய ஆணும் பெண்ணுமாக ஒரே உடம்புடன் வாழும் அண்ணன் தங்கை சந்திக்கும் பிரச்னைகள்தான் படம் ஹீரோ சந்தோஷ் மற்றும் நாயகி சம்யுக்தா விஸ்வநாத்தின் லவ் ரொமான்ஸ் எல்லாம் சூப்பர் ஹாட். தமிழை நுனி நாக்கில் ஆங்கிலம் போல் உச்சரிக்கும் சம்யுக்தாவின் குரலும், அவரின் குட்டி லவ்லி எக்ஸ்பிரஷன்ஸ்களும் சும்மா ஜிவ்வ்.

ரேஷ்மா வெங்கடேஷ், வினோத் கிஷன் கதையின் ஆன்மா விடிவி கணேஷ் காமெடி பழசு. பகவதி பெருமாள் வில்லத்தனம் புதுசு. போகப்போக நினைத்த நேர மெல்லாம் ஆண் பெண்ணாகவும். பெண் ஆணாகவும் மாறுவது அபத்தம். அதற்கு ஒரு மாத்திரை கண்டுபிடிப்பது எல்லாம் ஓவர்.

‘டபுள் ஆக்குப்பன்ஸி’ – அவன் அவள் அது

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *