எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தகவல் சரிபார்ப்பகம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அப்பதிவில், “தகவல் சரிபார்ப்பகம் குறித்த தகவல்கள், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என்று இந்த டம்மி அரசு பம்மி நிற்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பொய்ச்செய்திகளுக்கு எதிராகப் போரிட, கழக ஆட்சியின்போது தகவல் சரிபார்ப்பு தொடர்பான சர்வதேச அளவிலான நிறுவனங்களில் பங்களிப்புச் செய்த அனுபவம் கொண்டவர்களைக் கொண்டு TN Fact Check Unit தொடங்கப்பட்டது.
அதனை இன்றைய சர்க்கஸ் சர்க்கார், Virtual Abusers – கும்பலைக் கொண்டு Information Integrity Desk என்று மாற்றி இருக்கிறது.
இதற்காக வெளியிடப்பட்ட அரசாணை எங்கே? இதில் யார் யாரெல்லாம் பொறுப்பில் உள்ளார்கள்? என்னென்ன பணிகளைச் செய்கிறார்கள் ? இதற்கான நிதி ஒதுக்கீடு என்ன? என்ற கேள்விகளை எல்லாம் RTI மூலம் ஜீவிதா என்பவர் கேட்டுள்ளார்.
ஆனால், அவர் RTI மூலம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கூற முடியாது என்று இந்த அரசு கடிதம் கொடுத்துள்ளது.