டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன்! கைது செய்ய இடைக்காலத் தடை!| tasmac corruption senthil balaji gets conditional anticipatory bail

Spread the love

நீதிமன்றத்தில் நடைபெற்ற பரபரப்பான வாதங்களின் போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் முன்வைத்த வாதங்கள்:

“2021 முதல் 2025 வரை உள்ள விவகாரங்களில் ஏற்கனவே முதற்கட்ட விசாரணைகள் அனைத்தும் நடத்தப்பட்டுவிட்டன.

தற்போது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், ஏற்கனவே முடிந்த விவகாரத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மீண்டும் தொடங்கியுள்ளனர்.

அமலாக்கத்துறை தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையிலேயே லஞ்ச ஒழிப்புத் துறை தற்போது புதிதாக வழக்குப் பதிவு செய்துள்ளது. ” என்றார்.

இதற்குத் தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வாதிட்டார்.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

“2021-2025 காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட நபரே அமைச்சராக இருந்தார். அப்போது வழக்கு பதிவு செய்யப்படாமல் அவரே தடுத்து வைத்திருந்தார். ஆட்சி மாற்றத்திற்குப் பின், முந்தைய ஆட்சியில் நடந்த தவறுகள் மீது நடவடிக்கை எடுக்கச் சட்டத்தில் எந்தத் தடையும் இல்லை.

இந்த டாஸ்மாக் முறைகேடு வழக்கில் சுமார் 1,000 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது. செந்தில் பாலாஜி இதுவரை எந்தெந்தத் துறைகளுக்கெல்லாம் அமைச்சராக இருந்தாரோ, அந்த அத்தனை துறைகளிலும் குற்ற வழக்குகளைச் சந்தித்துத் தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபடும் நபராகவே இருக்கிறார்.

அவர் வெளியில் இருந்தால் சாட்சிகளுக்குப் பாதுகாப்பு இருக்காது; விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இழுத்தடிப்பார். எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது” என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்சி அடங்கிய அமர்வு தெரிவித்ததாவது:

“விசாரணையின் போது அவர் தலையிடாமல் இருப்பதையும், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பதையும் நாங்கள் உறுதி செய்கிறோம். இதற்கு மேல் உங்களுக்கு என்ன வேண்டும்? விசாரணைக்குத் தேவைப்பட்டால் நீங்கள் நீதிமன்றத்தை அணுகலாம்” இவ்வாறு கூறிய நீதிபதிகள், செந்தில் பாலாஜிக்குக் பின்வரும் நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *