டிரம்பிற்காக 50 ஆண்டு கால பழக்கத்தை கைவிட்ட ஜி ஜின்பிங்! இப்படி நடந்ததே இல்லை!வரவேற்பை கவனிச்சீங்களா | Xi Jinping welcomes Donald Trump at airport: It isthefirsttime in about 50 years of China

Spread the love

International

oi-Nantha Kumar R

பெய்ஜிங்: அமெரிக்கா – சீனா இடையே மறைமுகமாவும், நேரடியாகவும் பல்வேறு துறைகளில் மோதல்கள் உள்ளன. இருப்பினும் கூட சீனாவின் கடந்த 50 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில் முதல் முதலாக அதிபர் ஜி ஜின்பிங் விமான நிலையம் சென்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வரவேற்று இருப்பது பெரும் கவனம் பெற்றுள்ள நிலையில் பின்னணியில் பெரிய விஷயம் ஏதோ இருக்கலாம் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

சீனாவின் ஷென்சென் நகரில் ஆசிய – பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு நேற்று தொடங்கி இன்று வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கினர்.

us donald trump xi jinping

அதன்படி ஆஸ்திரேலியா, கனடா இந்தோனேஷியா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்பட மொத்தம் 21 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்டவர்கள் நேற்று சீனாவிற்கு தனி விமானத்தில் சென்றனர். அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

இதில் அதிக கவனம் பெற்றது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு தான். விமான நிலையத்தில் டொனால்ட் டிரம்ப் தனது ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ விமானத்தில் வந்திறங்கினார். மேளதாளங்கள், அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பு டிரம்புக்கு வழங்கப்பட்டது. அதோடு சீன அதிபர் ஜி ஜின்பிங்கே நேரடியாக விமான நிலையம் சென்று டிரம்பிடம் கைக்கொடுத்து கட்டியணைத்து வரவேற்றார்.

இதுதான் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. சீனாவை எடுத்து கொண்டால் அதிபராக இருக்கும் ஒருவர் வெளிநாட்டு தலைவரை விமான நிலையம் சென்று வரவேற்றது கடந்த 50 ஆண்டுகளில் ஒருமுறை கூட நடந்தது இல்லை. 1970ம் காலக்கட்டத்திற்கு பிறகு இப்படி நடந்தேதே இல்லை. துணை அதிபர்களாக இருப்பவர்கள் தான் விமான நிலையம் சென்று வெளிநாட்டு தலைவர்களை வரவேற்பார்கள். ஆனால் தற்போது ஜி ஜின்பிங்கே நேரடியாக சென்று டிரம்பை வரவேற்பு செய்துள்ளார்.

இது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அமெரிக்கா – சீனா ஆகிய நாடுகள் வல்லரசுகளாக உள்ளன. இருநாடுகள் இடையே கடும் மோதல் உள்ளது. பல்வேறு துறைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் இருநாடுகளும் தொடர்ந்து மோதி வருகின்றன. இப்படியான சூழலில் டிரம்ப்பிற்கு, ஜி ஜின்பிங் கொடுத்த வரவேற்பு கவனம் பெற்றுள்ளது. அதோடு இதன் பின்னணியில் ஏதோ பெரிய விஷயம் இருக்கலாம் என்றும் சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளையில் நாம் இன்னொரு விஷயத்தை மறந்து விடக்கூடாது. சமீபத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்கா சென்றார். அப்போது வாஷிங்டன் டிசி அருகே உள்ள ஜாயின்ட் பேஸ் விமான நிலையத்தில் அதிபர் ஜி ஜின்பிங்கை நேரடியாக டொனால்ட் டிரம்ப் வரவேற்றார் என்பது முக்கியமானது. இதனால் டிரம்பை போல் ஜி ஜின்பிங்கும், விமான நிலையம் சென்று அவரை வரவேற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த மாநாட்டில் இன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் தனியாக சந்தித்து பேச உள்ளனர். உலகில் வல்லரசு நாடுகளாக இருக்கும் இந்த 3 நாடுகளின் தலைவர்களும் ஒரே இடத்தில் இன்று மொத்தமாக கூடி பேசுவது அதிக கவனம் பெற்றுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *