International
oi-Nantha Kumar R
அம்மன்: அமெரிக்கா – ஈரான் இடையே தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் தான் ஈரான் நடத்திய தாக்குதலில் ஜோர்டானில் நிறுத்தி வைக்கப்பட்ட அமெரிக்காவின் போர் விமானங்கள் சேதமடைந்துள்ளன. இது இருநாடுகள் இடையேயான பதற்றத்தை அதிகரித்துள்ளன.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் அமெரிக்காவின் விமானப்படை தளம், ராணுவ தளம், கப்பற்படை தளம் உள்ளன. அமெரிக்காவிற்கும், மத்திய கிழக்கு நாடான ஜோர்டான் இடையே நல்ல உறவு உள்ளது. இதனால் ஜோர்டானில் உள்ள முவாஃபக் சால்டி விமானப்படைத் தளத்தில் அமெரிக்கா தனது போர் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் தான் இரவில் திடீரென்று ஈரான், முவாஃபக் சால்டி விமானப்படைத் தளத்தை நோக்கி குறிவைத்து தாக்கியது. இதில் வார்தோக் எனும் ஏ-10 தண்டர்போல்ட் போர் விமானம் கடும் சேதமடைந்தது. இந்த விமானத்தின் இறக்கை துண்டிக்கப்பட்டது. இதுதவிர எஃப் -15 எஸ் ரகத்தை சேர்ந்த 8 விமானங்கள் லேசாக சேதமடைந்துள்ளன.