`டி.என்.பி.எஸ்.சி.யில் அரசியல் தலையீடா?' – முன்னாள் தலைவர் ஆர்.நடராஜ் என்ன சொல்கிறார்?

Spread the love

கடந்த ஞாயிற்றுக் கிழமை டி.என்.பி.எஸ்.சி திட்டமிட்டிருந்த குரூப் 2 தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் ரத்து செய்யப்பட்ட‌ நிலையில், தேர்வாணையத்தின் முன்னாள் தலைவரும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியுமான நடராஜிடம் பேசினோம்.

”முதல்ல ஜூன் ஜூலையில் தான் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு வந்தது. நான் தலைவரா ஆனதுமே அதை ஜனவரிக்கு மாத்தினேன். தேர்வு அட்டவணை பக்காவா போட்டு நடத்தறதுல யு.பி.எஸ்.சி அவ்வளவு பர்ஃபெக்ட்.

அப்பப்ப யு.பி.எஸ்.சி யில இருந்து மாநில தேர்வாணையங்களை அழைத்து மீட்டிங் போடுவாங்க. என் பணிக் காலத்துல அப்படியான ஒரு மீட்டிங்கில் டி.என்.பி.எஸ்.சி.யை மத்த மாநிலங்கள் ஃபாலோ செய்யணும்னெல்லாம் சொன்னார், அப்போதைய யு.பி.எஸ்.சி சேர்மன் அகர்வால்.

தலைவர், செயலாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி மூணு பேரும் சேர்ந்து ஒர்க் பண்ணினா எந்தக் குழப்பமும் வராது.

இப்ப நடந்தது குறித்து நானும் செய்தி பார்த்தேன். எங்க எப்படி தப்பு நடந்தது தெரியலை. நடந்திருக்கக் கூடாது. இனிமே இந்த மாதிரி நடக்காதுங்கிற உறுதி தரணும் அதிகாரிகள்” என்றவரிடம்,

ஆணையத்தில் உறுப்பினர் பதவி இடங்கள் பாதிக்கு மேல் காலியாக இருப்பது குறித்துக் கேட்டபோது, “அதை அரசுதான் சரி செய்யணும். ஒண்ணே ஒண்ணு சொல்ல ஆசைப்படுறேன்.

லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கை இதுல அடங்கியிருக்கறதால அதை உணர்ந்து செயல்படணும் அரசு. கமிஷன் சுதந்திரமான ஓர் அமைப்பு. இதில் ஆட்சியாளர்கள் தலையீடு இருக்கக் கூடாது.

இந்த ஆட்சியில் அரசியல் தலையீடு இருக்கறதா சொல்றாங்க. அப்படி இருந்தா நல்லதில்ல” என்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *