முதலில் அருண் அண்ணன் ‘கேப்டன் மில்லர்’ படத்திற்குத்தான் என்னை ஆடிஷன் செய்தார். ஆனால் அதில் என்னால் நடிக்க முடியாமல் போனது.
பிறகு, லோகேஷ் அண்ணனை வைத்து அருண் படம் பண்ணுகிறார் என்று அழைப்பு வந்தது. ஆரம்பத்தில் போலீஸ் டீமில் அஷ்ரப் என்ற கேரக்டரில்தான் நடிக்கக் கேட்டார். பிறகுதான் இந்த ‘கிட்டி’ கதாபாத்திரத்தைக் கொடுத்தார்.
இவ்வளவு ஆக்ஷன் படம் எடுப்பதால் செட் பரபரப்பாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் அருண் அண்ணன் பயங்கர சில்லாக இருப்பார். உதவி இயக்குநர், ஒளிப்பதிவாளர், இயக்குநர் என அனைவரும் ஒரே மாதிரியாகவே பழகுவோம்.
முழுமையான கிரியேட்டிவ் சுதந்திரம் இருக்கும் செட் அது” என்றவர், காட்சிகள் குறித்து விவரிக்கையில், “”ஜீப் மேல் இருந்து குண்டை தூக்கி அடிக்கும் காட்சியில் மூன்று கேமராக்கள் இருந்தன. சரியாகக் கேமரா போகஸில் குண்டு போய் விழும்போதுதான் ஸ்டன்ட் டீம் அதை வெடிக்க வைப்பார்கள்.
‘ஐயயோ! எத்தனை டேக் போகப் போகிறதோ, நாளை காலை வரை ஆகிவிடுமோ’ என்று பயந்தேன். இதுவரை கிரிக்கெட் விளையாடும்போது கூட பந்தை தூக்கி ஸ்டம்பில் அடித்ததே இல்லை. ஆனால் என்ன நடந்ததென்று தெரியவில்லை, ஐந்து முறையும் டேக்கில் சரியாக ஜீப்பிலேயே அடித்தேன். சவாலாக இருக்கும் என்று நினைத்த விஷயம், சிறப்பாக அமைந்துவிட்டது” என உற்சாகமாகப் பகிர்ந்தார்.