"டீஸர், ட்ரெய்லரைப் பார்த்தே முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்; ஆனால்…"- விமர்சனங்கள் குறித்து மாதவன்

Spread the love

திரைப்படங்கள் குறித்து ரசிகர்கள் தெரிவிக்கும் விமர்சனங்கள் பற்றி மாதவன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

மாதவன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘ஜிடிஎன்’ (GDN). ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருந்தார்.

G.D.N  | ஜி.டி.என்
G.D.N | ஜி.டி.என்

பிரியாமணி, துஷாரா விஜயன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். ஆகஸ்ட் 7-ம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்தப் படம் வெளியாகி இருந்தது.

இந்தப் படம் தொடர்பாகச் சமீபத்தில் மாதவன் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.

அப்போது அவரிடம் திரைப்படங்கள் குறித்து ரசிகர்கள் தெரிவிக்கும் விமர்சனங்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “இப்போது, படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்கள் மிகவும் கோபமடைகிறார்கள். டீஸர் அல்லது ட்ரெய்லரைப் பார்த்தே அவர்கள் ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். அவர்கள் சொல்வது முற்றிலும் சரியே.

மாதவன்
மாதவன்

வாழ்க்கையில் அவர்களுடைய சாதனை என்னவென்றால், திரைப்படத்திற்கு ஒரு டிக்கெட் வாங்க முடிகிறது என்பதுதான். அதனால், அவர்கள்தாம் உங்கள் எஜமானர்கள். ரசிகர்கள் சொல்வதை திரைப்படப் படைப்பாளிகள் தலைவணங்கி ஏற்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *