டெங்கு காய்ச்சல்… இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் எமர்ஜென்சி சிகிச்சை அவசயம்! | Dengue fever… Emergency treatment is essential if these symptoms occur!

Spread the love

உடனடியாகக் கவனிக்க வேண்டிய ஆபத்தான அறிகுறிகளை அலட்சியம் செய்யக்கூடாது. அந்த வகையில், நீரிழப்பின் (Dehydrated) அறிகுறிகள் இருக்கின்றனவா எனப் பார்க்க வேண்டும்.  உணவு உட்கொள்ள முடியாமல் போவது மற்றும் போதுமான அளவு திரவங்களை அருந்த முடியாமல் போவது, இதன் காரணமாக வாய் மற்றும் உதடுகள் வறண்டு போதல், கண்கள் குழிவிழுந்து காணப்படுதல் போன்றவை  உடலில் நீரிழப்பு ஏற்பட்டதன் அறிகுறிகளாக இருக்கலாம். 

சுற்றியிருப்பவர்களிடம் சரியாகப் பேசாமல், பதிலளிக்காமல் எப்போதும் படுத்துக் கொண்டே மிகவும் சோர்வாக இருப்பதாகச் சொல்வது, உடலில் தடிப்புகள், சிவப்புப் புள்ளிகள் (Rashes) தோன்றுவது, பல் துலக்கும் போது சளிச்சவ்வுப் பகுதிகளில் (Mucous membranes) ரத்தக்கசிவு ஏற்படுவது போன்றவை தென்பட்டால், அவர்களின் ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை (Platelet count) மிகவும் குறைந்துவருகிறது என்று அர்த்தம்.

மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சம்பந்தப்பட்ட நபரை தாமதிக்காமல் மருத்துவமனையில் அனுமதித்து, தீவிர கண்காணிப்பில் வைத்து நரம்பு வழியாகத் திரவங்களை (IV Fluids) வழங்கிச் சிகிச்சை அளிப்பதே பாதுகாப்பானது.

மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சம்பந்தப்பட்ட நபரை தாமதிக்காமல் மருத்துவமனையில் அனுமதித்து, தீவிர கண்காணிப்பில் வைத்து நரம்பு வழியாகத் திரவங்களை (IV Fluids) வழங்கிச் சிகிச்சை அளிப்பதே பாதுகாப்பானது.

கடுமையான நீரிழப்பு (Severe Dehydration) பாதிப்பதால், காய்ச்சலின் போது உணவு மற்றும் நீர் உட்கொள்ளும் அளவு மிகவும் குறைந்துவிடுகிறது. குறிப்பாக, குழந்தைகளிடம் நீரிழப்பின் தீவிரத்தைக் கணிப்பது கடினம். குழந்தைகள் நல மருத்துவரால் (Pediatrician) மட்டுமே அதைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள முடியும். முதியவர்களும் பொதுவாக குறைந்த அளவே தண்ணீர் குடிப்பார்கள் என்பதால், அவர்களுக்கும் நீரிழப்பு ஏற்படும் அபாயம் அதிகம்.

இதையடுத்து, செப்டிக் ஷாக் (Septic Shock) எனப்படும் மிகவும் ஆபத்தான நிலைக்கும் நோயாளிகள் போகலாம். நோயாளியின் ரத்த அழுத்தம் (Blood Pressure) மிக ஆபத்தான அளவுக்குக் குறைந்துவிடும். இந்நிலை நோயாளிக்கு உடனடியாகத் தெரிய வாய்ப்பில்லை. மேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக பொது மருத்துவரிடம் (Physician) அல்லது குழந்தைகள்நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதிக்க வேண்டும்.

மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சம்பந்தப்பட்ட நபரைத் தாமதிக்காமல் மருத்துவமனையில் அனுமதித்து, தீவிர கண்காணிப்பில் வைத்து நரம்பு வழியாகத் திரவங்களை (IV Fluids) வழங்கிச் சிகிச்சை அளிப்பதே பாதுகாப்பானது.

டாக்டர் சாதனா தவப்பழனிசென்னை, அப்போலோ மருத்துவமனையில் குடும்பநல மருத்துவர் மற்றும் இன்டர்னல் மெடிசின் நிபுணராகப் பணிபுரிபவர். கோவிட் சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர். 20 ப்ஸ் ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.


உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *