“‘டோரதி’ படத்திற்கு நிறைய விமர்சனங்கள் வருகிறது, அதுதான் அந்த படத்தின் வெற்றி.!”- கீர்த்தி சுரேஷ் | keerthy suresh on dorathi in sathyavan savithri movie press meet

Spread the love

பிரவீன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சத்யவான் சாவித்திரி’ திரைப்படம் நாளை (நவ. 20) வெளியாகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷிடம் “டோரதி’ படத்திற்கு எழுந்த விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

சத்யவான் சாவித்திரி

சத்யவான் சாவித்திரி

அதற்கு பதில் அளித்த அவர், “‘டோரதி’ என்பது நான் ரசித்து பார்த்த படம். ‘டோரதி’ படத்திற்கு நிறைய விமர்சனங்கள் வருகின்றன. அதுதான் அந்தப் படத்தின் வெற்றி. சிலர் இந்தப் படத்தை ஏற்றுக்கொள்வார்கள். சிலர் இந்தப் படத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் இது ஒரு அழகான படம். டீடெயிலிங் இருக்கும் படம். பெருமையாக உள்ளது. LGBTQ கம்யூனிட்டி பற்றி கார்த்தி சுப்புராஜ் படம் எடுத்திருப்பது நமக்கு பெருமை. சமீபத்தில் வெளியான படங்களில் மிகச்சிறந்த படம் ‘டோரதி'” என்று கூறியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *