நவநீதம் பிள்ளையைத் தொடர்பு கொள்ள முடியாததால், நோபல் பரிசுக் கமிட்டி அவரிடம் இந்த அறிவிப்பு குறித்து முன்பே கூறவில்லையாம்.
இன்று நடந்த அறிவிப்பிற்குப் பிறகுதான், நவநீதம் பிள்ளைக்குத் தெரிய வந்திருக்கிறது.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய நவநீதம், “மிகுந்த நன்றி. இன்னும் கொஞ்சம் கைத்தட்டினால், இந்தப் பரிசை ட்ரம்புடன் பகிர்ந்துகொள்வேன் (கேலியாக).
எனக்கு இது பற்றி முன்பு தெரியாது. இது உண்மைதானா என்பதுதான் என்னுடைய கேள்வி.
மக்கள் மனதார ஏற்றுக்கொண்டால் ஒழிய, எந்தவொரு விருதையோ பரிசையோ யாரும் பெற விரும்புவதில்லை. எனவே, உங்களின் இந்த அன்பான கிளாப்களை நான் மிகவும் நெகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.