ட்ரம்பிற்கு வைக்கப்பட்ட செக்? பிரிக்ஸ் மாநாட்டின் பின்னணி ! – Kumudam

Spread the love

டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் உள்ளூர் கரன்சியிலேயே வர்த்தகம் செய்து கொள்வது என்கிற பிரகடனத்தின் மூலம் அமெரிக்காவின் டாலருக்கு செக் வைக்கப் பட்டிருக்கிறது. தவிர, இஷ்டத்திற்கு வரி விதிப்பது, பிற நாடுகளை அட்டாக் செய்வது போன்ற அமெரிக்காவின் செயலுக்கு முதன்முறையாக இந்திய மண்ணிலிருந்து கண்டனம் விடுக்கப்பட்டிருப்பது ட்ரம்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!

கடந்த 2009ம் ஆண்டு பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நான்கு நாடுகளுடன் பிரிக்ஸ் அமைப்பு தொடங்கப்பட்டது. தற்போது இந்த அமைப்பில் 11 நாடுகள் உள்ளன. மேலும் 10 நாடுகள் சேர விண்ணப்பித்திருக்கின்றன. அதில் பாகிஸ்தானை தவிர, மற்ற நாடுகளை இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. எனவே, வரும் காலங்களில் 21 நாடுகளுடன் பிரிக்ஸ் விரிவடைய இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 12, 13 தேதிகளில் புதுடெல்லியில் 18வது பிரிக்ஸ் மாநாடு நடைபெற்றது. இதில் குளோபல் சௌத் பவர்ஃபுல் நாடுகளான இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டது சர்வதேசத்தை ஈர்த்திருக்கிறது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை கலந்துகொள்ள விடக்கூடாது என்பதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதியாக இருந்தார். அதற்காக ‘வரிவிதிப்பு தொடர்பாக பேசலாம்’ என அவரை அமெரிக்காவுக்கு அழைத்திருந்தார். ஆனால், அவரது அழைப்பை நிராகரித்துவிட்டு ஜின்பிங் இந்தியா வந்தார். இதை ட்ரம்ப் எதிர்பார்க்கவில்லை.

பிரிக்ஸ் மாநாடு தொடர்பாக டெல்லியில் உள்ள பத்திரிகையாளர்கள் சிலரிடம் பேசினோம். “பிரிக்ஸ் மாநாடு பிரதமர் மோடியை குளோபல் சௌத் லீடராக உயர்த்தியிருக்கிறது. பிரதமர் மோடி, புடின், ஜின்பிங் ஆகியோர் பரஸ்பரம் கட்டிப்பிடித்து, கைகுலுக்கி பேசிக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளை அதிரவைத்திருக்கிறது. குறிப்பாக எதிரும் புதிருமாக இருக்கும் ஈரான் அதிபர் மசூத் பெஷஸ்கியான், யு.ஏ.இ. பிரதிநிதி காலேத் பின் முகமது அல் நஹ்யான் இருவரும் சந்தித்துப் பேசியிருப்பது சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியா, சீனா, ரஷ்யா தவிர, பிரேசில், எகிப்து, எத்தியோப்பியா, தென் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா, ஈரான், சவுதி அரேபியா உள்ளிட்ட 11 நாட்டுத் தலைவர்களும், 10 சிறப்பு அழைப்பாளர்களும் கலந்துகொண்டனர். இம்மாநாட்டில் வெளியிடப்பட்ட புதுடெல்லி பிரகடனம்தான் சர்வதேச ஹாட் டாபிக். அது முழுக்க முழுக்க அமெரிக்காவையும் அதிபர் ட்ரம்பையும் பெயர் குறிப்பிடாமல் விமர்சித்திருக்கிறது. மத்திய கிழக்கில் ஈரானுடனான போருக்கு சுடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. காசாவை தாக்கிவரும் இஸ்ரேலையும் பெயர் குறிப்பிடாமல் இம்மாநாடு கண்டித்திருக்கிறது. அதேசமயம், ரஷ்யா உக்ரைன் போர் பற்றி மூச்சுவிடவில்லை.

தவிர, ‘உலக வர்த்தக அமைப்பை மீறி ஒரு தலைபட்சமாக விதிக்கப்படும் வரிகள் உலக உணவு விநியோக சங்கிலியில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சர்வதேச சட்டத்திற்கு முரணாக ஒரு தரப்பு மட்டும் இஷ்டத்திற்கு பொருளாதாரத் தடை விதிப்பது கவலைக்குரியது. 2025ல் காஷ்மீரில் நடந்த பஹல்காம் அட்டாக்கிற்கு கண்டனம்’ போன்றவற்றை தெரிவித்ததோடு ‘பயங்கரவாதத்தை தூண்டும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும்’ என பாகிஸ்தானையும் மறைமுகமாக சாடியிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, ‘இனி பிரிக்ஸ் நாடுகள் தங்கள் சொந்த கரன்சியிலேயே வர்த்தம் செய்துகொள்ளலாம்’ என்கிற பிரகடனம் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு வைக்கப்பட்டிருக்கும் செக். இதன் மூலம் ரூபாய், யுவான் கரன்சிகளில் பிரிக்ஸ் நாடுகள் வர்த்தகத்தை மேற்கொள்ளும். விளைவாக, அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும். அதோடு பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்கும் நேரடி பணப் பரிமாற்றத்திற்காக உலக வங்கி ஸ்டைலில் ‘பிரிக்ஸ் பேமன்ட் டாஸ்க் ஃபோர்ஸ்’ அமைப்பை தொடங்கவும், நிதி, காப்பீட்டுப் பாதுகாப்புக்காசு குஜராத்தில் ‘பிரிக்ஸ் ரிஸ்க் லேப் தொடங்கவும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இவை எல்லாம் அமெரிக்காவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உச்சி மாநாட்டின்போது ரஷ்ய அதிபர் புதின் பிரிக்ஸ் கரன்சியை கையில் வைத்துக்கொண்டு போஸ் கொடுத்தது சமூக ஊடகங்களில் வைரலானது. எனவே, இந்தியாவில் வைத்து பிரிக்ஸ் கரன்சியை வெளியிடுவது என்கிற முடிவும் அப்போது எடுக்கப்பட்டது. ஆனால், பிரிக்ஸ் கரன்சி வெளியிட இந்தியா தயக்கம் காட்டியதால், இம்மாநாட்டின்போது பிரிக்ஸ் கரன்சி வெளியிடப்படவில்லை. முதலில் எல்லா நாடுகளும் வர்த்தகத்தில் தங்கள் கரன்சிக்கு மாறிய பிறகு பிரிக்ஸ் கரன்சியை வெளியிடலாம் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில், உலக மக்கள் தொகையில் 50 சதவிகிதமும், ஜி.டி.பி.யில் 40 சதவிகிதமும், வர்த்தகத்தில் 25 சதவிகிதமும் கொண்டவை பிரிக்ஸ் நாடுகள். எனவே மேற்கத்திய நாடுகள் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தை ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது. பிரிக்ஸ் விறு அமைப்பு யாருக்கும் எதிரி அல்ல” என்றார், அதாவது ரீனா, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள், ‘பிரிக்ஸ் அமைப்பு அமெரிக்காவுக்கு எதிரானது’ என்கிற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்ததாலேயே பிரதமர் மோடி அப்படி பேசியிருக்கிறார்.

ஈரான் அதிபர் மசூத் பெவுஸ்கியான் பேசுகையில் எங்கள்மீது பொருளாதார தடை விதித்ததோடு, போரை திணித்ததும் அமெரிக்காதான். அவர்களின் எந்த நடவடிக்கைக்கும் அஞ்ச மாட்டோம்’ என இந்திய மண்ணிலிருந்து சவால்விட்டது யாரும் எதிர்பாராதது, மொத்தத்தில் புதின், ஜின்பிங் ஆகிய வல்லரக நாட்டு தலைவர்களையும், சீரியும், பாம்புமாயிருந்த ஈரான் யு.ஏ.இ. தலைவர்களையும் ஒரே மேடையில் சந்திக்க வைத்திருப்பது இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி” என்றார்கள்.

ட்ரம்ப் சும்மா இருப்பாரா என்பதே உலகம் எழுப்பும் கேள்வி!

– குமுதம் செய்திகளுக்காக அ. துரைசாமி .

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *