தங்கத்தையும் விட்டுவைக்காத AI.. சத்தமில்லாமல் நடக்கும் மாற்றம்! விலை மீண்டும் எகிறும்! வந்த வார்னிங் | Impact of AI in Gold Price, Artificial intelligence Investment Slowdown Could Push Gold yellow metal

Spread the love

Business

oi-Vigneshkumar

வாஷிங்டன்: உலகளவில் தங்கம் விலை எந்த திசையில் செல்லும் என்று முதலீட்டாளர்கள் கண்காணித்து வரும் நிலையில், செயற்கை நுண்ணறிவு துறையில் முதலீடுகள் சரிய ஆரம்பித்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது ஏஐ துறையில் செய்யப்படும் முதலீடுகள் சரிவது தங்கத்தின் விலையை மீண்டும் உச்சத்திற்கு எடுத்து செல்லக்கூடும் என்று ஜெஃப்ரீஸ் நிறுவனத்தின் வல்லுநர் கிறிஸ்டோபர் வுட் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இப்போது திடீரென யூடர்ன் போட்டு சரிய ஆரம்பித்துள்ளது. கிட்டத்தட்ட இந்தாண்டு முழுக்கவே தங்கம் விலை தொடர்ந்து சரிந்தே வருகிறது. உச்ச விலையிலிருந்து தங்கம் விலை கிட்டத்தட்ட 20% வரை குறைந்துள்ளது. இனி வரும் காலங்களில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பதே இப்போது மக்களிடையே முக்கிய கேள்வியாக உள்ளது.

Gold AI

ஏஐ துறை

இதற்கிடையே ஏஐ துறையில் நடக்கும் மாற்றங்களால் தங்கம் விலை உயரும் என்று ஜெஃப்ரீஸ் நிறுவனத்தின் வல்லுநர் கிறிஸ்டோபர் வுட் தெரிவித்துள்ளார். அதாவது கடந்த சில ஆண்டுகளாகவே ஏஐ துறையில் மிக பெரிய முதலீடுகள் செய்யப்பட்டு வந்தன. ஆனால், இப்போது நாம் முதலீடு செய்யும் அளவுக்கு பணம் திரும்ப வருமா என்பதில் முதலீட்டாளர்களுக்கு சந்தேகம் வர ஆரம்பித்துள்ளது. இதனால் ஏஐ முதலீடுகள் குறையும் சிக்னல் தெரிகிறது.

அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியில் இப்போது ஏஐ மிக பெரிய பங்கு வகிக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் அமெரிக்க ஜிடிபி 2.1 வளர்ந்திருந்த நிலையில், அதில் கிட்டத்தட்ட 1.39% வளர்ச்சிக்கு ஏஐ காரணமாக இருந்துள்ளது. அப்படி இருக்கும் ஏஐ துறையில் முதலீடுகள் குறைந்தால் அது ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதிக்கலாம் என்று கிறிஸ்டோபர் வுட் எச்சரித்துள்ளார்.

சந்தேகம்

இவ்வளவு பெரிய தொகை தொடர்ந்து முதலீடு செய்யப்படுமா என வுட் சந்தேகம் எழுப்புகிறார். AI முதலீடுகள் உச்சத்தை நெருங்கி உள்ளதாகவும் இனி வரும் காலங்களில் அதில் செய்யப்படும் முதலீடுகள் குறையலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார். குறிப்பாக சீனாவின் AI மாடல்களை ஆபரேட் செய்ய செலவு குறைவு. இது அமெரிக்க ஏஐ நிறுவனங்களுக்கு மிக பெரிய இழப்புகளை ஏற்படுத்தலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏஐ துறையில் நடக்கும் இந்த மாற்றம் தங்கத்திலும் எதிரொலிக்கும் என்பதே அவரது நிலைப்பாடு. அதாவது தங்கம் எந்தவித வட்டியையும் வருமானத்தையும் தராத ஒரு முதலீடாகும். இதனால் வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும்போது முதலீட்டாளர்கள் தங்கம் பக்கமே போக மாட்டார்கள். வட்டி விகிதங்கள் குறையும் என்ற எதிர்பார்ப்பு உருவாகும்போது தான் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிக்கும்.

தங்கம் விலை

இப்போது சர்வதேச சந்தையில் அமெரிக்க பெடரல் ரிசர்வின் வட்டி கொள்கை தான் தங்கம் விலை சரிவுக்கு காரணமாக இருக்கிறது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை ஏற்றவே தங்கம் விலை சரிகிறது. ஆனால், AI முதலீடுகள் குறைந்து அமெரிக்க பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டால், பெடரல் ரிசர்வ் வட்டி விகித முடிவை மாற்றி, வட்டியை குறைக்க வேண்டிய சூழல் உருவாகலாம். அப்போது தங்கத்தின் மீதான முதலீடு மீண்டும் அதிகரித்து விலையும் உயரும் என்பதே அவரது வாதம்!

என்ன நடக்கும்

மறுபுறம் AI முதலீடுகள் முற்றிலும் முடங்காமல், முதலீடு செய்யப்படும் தொகை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்தால் அமெரிக்க வளர்ச்சியில் பெரியளவில் பாதிப்பு ஏற்படாது. அதுபோன்ற சூழலில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தலாம். இதுபோன்ற சூழல்களில் தங்கத்தின் விலை உயர்வுக்கு கொஞ்சம் தள்ளி போகும். அதாவது ஏஐ நேரடியாக தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற போதிலும் ஏஐ உருவாக்கக்கூடிய பொருளாதார சூழலைப் பொறுத்தே தங்க மார்கெட்டில் அடுத்தகட்ட நகர்வு அமையும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *