`தங்கம் கடத்தலை மையமாகக்கொண்டு உருவான கலீஃபா' – பிரித்விராஜ், மோகன்லால் படம் ஓணம் பண்டிகைக்கு ரிலீஸ்

Spread the love

பிரித்விராஜ், வைசாக் மற்றும் ஜினு ஆபிரகாம் கூட்டணியில் உருவாகும் சினிமா ‘கலீஃபா. ​

‘பழிவாங்குதல் பொன் எழுத்துக்களால் எழுதப்படும்’ என்ற டேக்லைனுடன் உருவாகும் இந்த சினிமாவில், ‘மாம்பறக்கல் ஆமிர் அலி’ என்ற கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடிக்கிறார். இந்த சினிமாவில்’ மாம்பறக்கல் அகமது அலி’ என்ற சிறப்புத் தோற்றத்தில் நடிகர் மோகன்லால் வருகிறார். இரண்டு பாகங்களாக வரும் ‘கலீஃபா’ சினிமாவில் இரண்டாம் பாகத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

தங்கம் கடத்தலை மையமாக வைத்து, ஒரு பிரம்மாண்ட மாஸ் என்டர்டெய்னராக இப்படம் தயாராகிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20-ம் தேதி இந்த சினிமா உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

மோகன்லால்

தெலுங்கு நடிகை மாளவிகா சர்மா இப்படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். ​பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் இப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார். மாஸ் ஸ்டைலிஷ் ஆக்‌ஷன் த்ரில்லரான இதில், விறுவிறுப்பான சேஸிங் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ‘போக்கிரி ராஜா’ படத்திற்குப் பிறகு வைசாக் – பிரித்விராஜ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. லண்டன், துபாய், கேரளா மற்றும் நேபாளம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

கலீஃபா சினிமாவில் பிரித்விராஜ்

இந்த சினிமாவின் “அசலாயவளே” என்ற முதல் பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ள இந்த மனதை வருடும் காதல் பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் மக்பூல் மன்சூர் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். பிரித்விராஜ் மற்றும் மாளவிகா இடையேயான காதல் தருணங்கள் இந்தப் பாடலின் லிரிக் வீடியோவில் ஹைலைட்டாக அமைந்துள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *