தங்கம், வெள்ளி விலையில் அதிரடி சரிவு; முதலீட்டாளர்கள் கவனம்|Gold Crashes Again: ₹5,600 Drop in Just Two Days

Spread the love

சர்வதேச சந்தையிலும் சரி… இந்தியாவிலும் சரி… தங்கம் மற்றும் வெள்ளி விலை நல்ல சரிவை சந்தித்து வருகிறது.

சர்வதேச சந்தையில் தற்போது ஒரு அவுன்ஸ் (28.34 கிராம்) தங்கத்தின் விலை 4,071 டாலர்கள். ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 63.39 டாலர்கள்.

சென்னையை எடுத்துகொண்டால், இன்று ஒரு தங்கம் ரூ.13,500-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.1,08,000-க்கும் விற்பனை ஆகி வருகிறது. இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.260 ஆகும்.

நேற்றும், இன்றும் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.700-ம், பவுனுக்கு ரூ.5,600-ம் குறைந்துள்ளது… வெள்ளி விலை ரூ.10 குறைந்துள்ளது.

ஈரான் போருக்கு முன், சென்னையில் ஒரு பவுனுக்கு ரூ.1.20 லட்சத்திற்கு மேல் விற்றுக்கொண்டிருந்த தங்கம் விலை, தற்போது ரூ.1.08 லட்சத்திற்கு இறங்கியுள்ளது.

போர் காரணமாக, உலக நாடுகளும், முதலீட்டாளர்களும் தங்கத்தை விட்டு கச்சா எண்ணெய், அமெரிக்க டாலர்கள் என திசை மாறியதே இந்தத் தங்கம் விலை சரிவிற்கு மிக முக்கிய காரணம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *