தஞ்சாவூர்: சென்னையில் கைது; தஞ்சையில் விசாரணை – உதயநிதி ஸ்டாலின் கைது சம்பவம் | udhayanidhi stalin arest and investigation issue what happened in tanjore

Spread the love

இன்னொருபக்கம், மாலை 6.30 மணியளவில் திருச்சி வழியாக வந்த காவல்துறை வாகனம், பூண்டி பிரிவுசாலை வரை வந்துவிட்டு, மீண்டும் செங்கிப்பட்டி காவல் நிலையத்துக்கு உதயநிதி ஸ்டாலினை அழைத்துச் சென்றனர்.

தன்னுடைய வழக்கறிஞர்கள் வந்தால்தான் காவல் நிலையத்துக்குள் வருவேன் எனக் கூறி அங்கு உதயநிதி ஸ்டாலின் வாகனத்தை விட்டு இறங்காமல் சுமார் அரைமணி நேரம் காத்திருந்தார். பின்னர், தி.மு.க வழக்கறிஞர்கள் தஞ்சாவூரிலிருந்து செங்கிப்பட்டி காவல் நிலையத்துக்குச் சென்றனர்.

அதன்பிறகு, உதயநிதி வாகனத்திலிருந்து இறங்கி காவல் நிலையத்துக்குள் சென்றார். அவரிடம் தஞ்சாவூர் எஸ்.பி சுந்தரவதனம் முன்னிலையில் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் விசாரணை நடத்தினார்.

investigation

investigation
d.dixith, சோ. யோகேஷ்

சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற விசாரணையின்போது, போலீஸாரின் கேள்விகளுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார். செங்கிப்பட்டி காவல் நிலையத்துக்கு உதயநிதி ஸ்டாலின் வந்த தகவல் தெரிந்ததும், அங்கு ஆயிரக்கணக்கான தி.மு.க-வினர் திரண்டு, போலீஸாருக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது, பிக்பாஸ் ஜூலியும் தி.மு.க-வினர் கூட்டத்தில் நின்றுகொண்டு, த.வெ.க அரசுக்கு எதிராகக் கோஷம் எழுப்பினார். ஏராளமான வாகனங்களில் தி.மு.க-வினர் வந்ததால் தஞ்சாவூர் – திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனால், பொதுமக்கள், வாகனங்களில் சென்ற பலரும் பாதிக்கப்பட்டனர். அதே போல், தி.மு.க-வினர் உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தி பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *