இந்த சூழலில் ஐஜி பாலகிருஷ்ணன் இதனை விசாரணை நடத்தியதாகவும், இருதரப்பும் விருப்பத்தின் பேரில் பேசி முடித்து கொள்ள விரும்பியதாக சொல்லப்படுகிறது. அப்போது சரவணன் தரப்பு, டாக்டர் இராமசாமி தரப்புக்கு ரூ.24 கோடி செட்டில் செய்து விடுவதாக எழுதி கொடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுகுமாறன். பேச்சு வார்த்தையின்படி முதல் கட்டமாக ரூ.5 கோடியை இன்ஸ்பெக்டர் சுகுமாறன் வீட்டில் வைத்து சரவணன் தரப்பு கொடுத்துள்ளனர். அப்போது ஜெயஸ்ரீயும் இருந்துள்ளார்.
இதற்கு முன்பே சரவணனும், அவரது அப்பா ராமனும் ஐஜி பாலகிருஷ்ணன் இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை, ஒருதலைப்பட்சமாகவும், இராமசாமி தரப்புக்கு ஆதரவாகவும் செயல்படுவதாக கூறி இந்த வழக்கை சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட வேண்டும் என ஆளுநர், முதல்வர் தனிபிரிவு, டி.ஜி.பி உள்ளிட்டோரிடம் மனு அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை தொடர்கிறது. இந்நிலையில், கடந்த 9ம் தேதி சிபிசிஐடி போலீஸார் இன்ஸ்பெக்டர் சுகுமாறனிடம் அவரது வீட்டில் வைத்து விசாரணை செய்தனர்.