தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கோபுரராஜபுரம் ரயில்வே கேட் பகுதியில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராகுல் குமார்(30) என்பவர் கேட் கீப்பராகப் பணிபுரிந்து வந்தார்.
நேற்று நள்ளிரவு அந்தோதியா ரயில் வந்தது. அப்போது ராகுல் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அந்தோதியா ரயில் முன் விழுந்து தற்கொலை செய்வதற்கு முயன்றுள்ளார்.

இதைப் பார்த்த கேட் கீப்பர் ராகுல் பதறியபடி யாரென்று தெரியாத அந்த நபரைக் காப்பாற்றுவதற்காக ஓடியிருக்கிறார். அப்போது அந்த நபர் ரயில் முன் பாய்வதற்கு முயல ராகுல் அவரைத் தடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக இருவரும் உள்ளே விழுந்து நிலையில் ரயில் பயங்கரமாக மோதியது. தண்டவாளத்தில் விழுந்த இருவரும் சுமார் 500 மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டனர்.